Home /News /lifestyle /

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிவப்பு நிறத்திலான பழங்களும், காய்கறிகளும் ஏன் அவசியம்?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிவப்பு நிறத்திலான பழங்களும், காய்கறிகளும் ஏன் அவசியம்?

பழங்கள், காய்கறிகள்

பழங்கள், காய்கறிகள்

ஸ்ட்ராபெர்ரிகள், ரெட் செர்ரிகள், சிவப்பு மிளகாய்கள், தக்காளி, தர்பூசணி மற்றும் மாதுளை போன்ற சிவப்பு நிறத்திலான பழங்கள் மற்றும் காய்கறிகள் உங்கள் உணவில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்.

சிவப்பு நிறத்திலான பழங்கள் மற்றும் காய்கறிகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை, ஆக அவைகள் நமது உடல் நலத்திற்கும், ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பிட்ட சில பழங்களில் உள்ள லைகோபீன் தனிமம் தான் அவைகள் சிவப்பு நிறத்தில் இருக்க காரணம் ஆகும். லைகோபீன் என்பது ஒரு அத்தியாவசியமான மற்றும் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும், இது மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டது.

எனவே தான் ஸ்ட்ராபெர்ரிகள், ரெட் செர்ரிகள், சிவப்பு மிளகாய்கள், தக்காளி, தர்பூசணி மற்றும் மாதுளை போன்ற சிவப்பு நிறத்திலான பழங்கள் மற்றும் காய்கறிகள் உங்கள் உணவில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும். அப்படியாக மனித ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் சில சிவப்பு நிற பழங்கள் மற்றும் காய்கறிகளும், அவற்றின் நன்மைகளை பற்றியும் மேலோட்டமாக அலசுவோம் வாருங்கள்.

பெரும்பாலும் இந்த பட்டியலில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை நீங்கள் முன்னரே அறிந்து இருக்கலாம். ஆனால் அவைகள், குறிப்பாக என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்பதை நீங்கள் அறியாது இருக்கலாம்; வாருங்கள் அதையும் தெரிந்து வைத்துக்கொள்வோம்.

அடுத்தமுறை குழந்தைகள் பீட்ரூட் சாப்பிட மறுக்கும் போது, எவரேனும் மாதுளம் பழத்தை உரிக்க சிரமப்பட்டு அதை சாப்பிடாமல் தவிர்க்கும் போதும்.. தேவை இல்லாத கட்டுக்கதைகளை சொல்வதற்கு பதிலாக, இதை சாப்பிட்டால் என்னென்ன நன்மை, சாப்பிடவில்லை என்றால் என்னென்ன இழப்பு என்பதை பற்றி பேசுங்கள். பீட்ரூட் தானாக தின்னப்படும்; மாதுளம் உரிக்கப்படும்.



ரெட் ஆப்பிள்:

ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன, மேலும் தினமும் ஆப்பிளை சாப்பிடுவதன் விளைவாக உங்கள் உடலின் கொலஸ்ட்ரால் அளவு பராமரிக்கப்படும் மற்றும் இது இதயத்திற்கும் நன்மை பயக்கும். மேலும் இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்து நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளின் நலத்திலும் கவனம் செலுத்துகிறது.

Green Apple Benefits : பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளை பெறலாமா..? மிஸ் பண்ணிடாதீங்க

பீட்ரூட்:

பீட்ரூட்டில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் லைகோபீன் போன்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது மனித உடலின் இரத்தப் பற்றாக்குறையை நீக்குகிறது. நீங்கள் தொடர்ந்து பீட்ரூட் சாப்பிடும் பழக்கம் கொண்டவர் என்றால் அது உங்கள் உடலை உற்சாகப்படுத்தும், அதே சமயம் உங்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.



மாதுளம் பழம்:

மாதுளையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து உள்ளன, அவைகள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகின்றன. மேலும் நம் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் அழற்சி எதிர்ப்பு (anti-inflammatory) பண்பையும் கொண்டுள்ளன.

தக்காளிப் பழம்:

வைட்டமின்-சி மற்றும் லைகோபீன் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்களுடன் தக்காளி பழத்தில் ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. தக்காளியை சாலட்டாக சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், உடன் மேற்கண்டவற்றில் உள்ளது போல் இதிலும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் திறன் உள்ளது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Fruits, Immunity boost, Vegetables

அடுத்த செய்தி