பஞ்சாபி ஸ்டைலில் மோர் குழம்பு செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? கோடை காலத்திற்கு மிகவும் நல்லது..!

மோர் குழம்பு

கோடைகாலத்தில் பசியின்மை என்பது வைட்டமின் B12 ஐக் குறைப்பதைக் குறிக்கிறது மற்றும் அதை மேம்படுத்துவதற்கான சிறந்த வழி தயிர் போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வது, இது வயிறு மற்றும் சருமத்திற்கும் நல்லது.

  • Share this:
ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்றார்ப்போல உணவு முறைகளை கடைபிடிப்பது அவசியம். அந்த வகையில் கோடைகாலத்திற்கு ஏற்ப சில உணவுகளை உட்கொள்வதால் வெப்பத்தில் இருந்து நம் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதை தடுக்கலாம். அந்த வகையில், மோர் குழம்பு ஜீரணிக்க மிகவும் எளிதானது.

அதேபோல வெயில் காலத்திற்கு ஏற்ப பல ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு தருகிறது. மேலும் இந்த மோர் குழம்பு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பலவிதமான சமைக்கப்படுகிறது. தமிழில் மோர் குழம்பு என்று அழைக்கப்படுவதை போல, பஞ்சாபில் இதனை கடி என்று அழைப்பார்கள்.

தமிழ்நாட்டில் வெள்ளை பூசணி அல்லது வெண்டைக்காய் மற்றும் தயிர் வைத்து மோர் குழம்பு செய்து சாப்பிடுவது வழக்கம். அதேபோல, பஞ்சாபில் இதனை வேறுவிதமான செய்து சாப்பிடுவார்கள். பசியை அதிகரிப்பதற்கும், கோடைகாலத்தில் உடல் மீட்பு சக்தியை அதிகரிப்பதற்கும் மற்றும் தோல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கும் ஒரு சிகிச்சையாக இதனை ஆயுர்வேதத்தில் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதனை குறித்து பின்வருமாறு காண்போம்.

கோடை காலத்தில் மோர்க்குழம்பை ஏன் சாப்பிட வேண்டும்:

கோடையில் பசி உணர்வு குறைவாகவே இருக்கும். மேலும் அதிகபடியான வெப்பம் தோல் மற்றும் குடலில் பாதிப்பை ஏற்படுத்தும். அடிவயிறு தசை பிடித்திருப்பதை போல இருக்கும். இதனால் மலச்சிக்கல் மற்றும் வாயு தொல்லை ஆகியவை இருக்கும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மோர்குழம்பினை சாப்பிடுவது உதவியாக இருக்கும். ஏனெனில் இதில் செரிமான அமைப்பை சீராகவும்,நீரிழப்பு-ஐ கட்டுப்படுத்தவும் உதவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

கோடைகாலத்தில் பசியின்மை என்பது வைட்டமின் B12 ஐக் குறைப்பதைக் குறிக்கிறது மற்றும் அதை மேம்படுத்துவதற்கான சிறந்த வழி தயிர் போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வது, இது வயிறு மற்றும் சருமத்திற்கும் நல்லது. மேலும் பஞ்சாபி ஸ்டைல் மோர் குழம்பை பொறுத்தவரை கடலை பருப்பு போன்ற வகைகளைச் சேர்த்து பகோடா செய்து, பின்னர் தயிர், மசாலா மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைக் கொண்டு அதை அதிக சத்து நிறைந்த ஒன்றாக செய்து சாப்பிடுவர். எனவே, இந்த மோர் குழம்பு கோடை வெப்பத்திற்கான இறுதி மீட்பராக செயல்படுகிறது. இதனை கடி பகோடா குழம்பு என்று அழைப்பர்.பஞ்சாபி கடி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

புளிப்பு மோர் – 1 கப்
கடலை மாவு – ½ கப்
உப்பு – தேவைக்கு ஏற்ப
வெங்காயம் - 1

தாளிக்க..

ஜீரகம், வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4,
வரமிளகாய் - 4
பூண்டு, இஞ்சி - சிறிதளவு
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு

செய்முறை: கடலை மாவு, உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம் இவற்றையெல்லாம் நன்றாக கலந்து சிறிய பக்கோடாவாக சூடான எண்ணெயில் பொரித்து தனியாக எடுத்து வைக்கவும். சூடான எண்ணெயில் ஜீரகம், வெந்தயம், பச்சை மிளகாய், வரமிளகாய், கருவேப்பிலை, பூண்டு, இஞ்சி போட்டு வதக்கவும். ஒரு கிண்ணத்தில் வரமிளகாய்த்தூள், மஞ்சத்தூள், பெருங்காயத்தூள், தனியாத்தூள் சிறிது கரம் மசாலாத்தூள் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கலக்கி தாளிப்பில் கொட்டவும். மசாலா வெந்தவுடன் அதில் கடலை மாவு, உப்பு கரைத்த மோர் கரைசலை ½ மணி நேரம் குறைந்த தீயில் கொதிக்க வைக்கவும். பின் பொரித்த பக்கோடாக்களை கடியில் போட்டு 2 ஸ்பூன் நெய் விட்டு மூடி வைக்கவும். இதனை சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Mint Juice Recipe : கோடைகாலத்தில் புதினா ஜூஸ் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்!

மோர் குழம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

வீக்கம், மலச்சிக்கல், முகப்பரு ஆகியவற்றைக் குறைப்பதாக அறியப்படுகிறது, மேலும் ஒற்றைத் தலைவலி மற்றும் மனநிலை மாற்றங்களுக்கு இது ஒரு தடுப்பாகவும் பயன்படுத்தப்படுகிறது.
Published by:Sivaranjani E
First published: