கரும்பு சாப்பிடாத பொங்கலை கடப்பது அவ்வளவு சுலபம் இல்லை. அதேசமயம் சிலர் ஆசைப்பட்டு சாப்பிட்டுவிட்டு நாக்கு எரிகிறது, வயிறு வலிக்கிறது, தலை வலிக்கிறது என புலம்புவார்கள். இந்த கரும்பு சாப்பிட்டதுதான் காரணம் என கரும்பையும் குறை சொல்வார்கள். ஆனால் கரும்பு சாப்பிட்ட பிறகு நீங்கள் செய்த தவறுதான் இந்த பிரச்சனைகளுக்கு காரணம் என தெரியுமா..?
ஆம், நீங்கள் கரும்பு சாப்பிட்ட பிறகு உடனே தண்ணீர் குடித்தீர்கள் எனில் நீங்கள் அனுபவிக்கும் அத்தனை உபாதைகளுக்கும் தண்ணீர்தான் காரணம் கரும்பு அல்ல..
அதாவது கரும்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது மிகவும் தவறான காம்பினேஷன். ஏனெனில் கரும்பில் இருக்கும் கால்சியம் மற்றும் பொட்டாசியம் தண்ணீர் குடித்த பின் தவறான ரியாக்ஷனாகிவிடும். அதாவது எக்சோதெர்மிக் ரியாஷனை உருவாக்கும்.
எக்சோதெர்மிக் ரியாக்ஷன் என்பது ஒரு வேதியியல் தாக்கம் வெப்பத்தை வெளியிட்டபடி நடைபெறும். அது வெப்பம் விடு வினை அல்லது புறவெப்பத்தாக்கம் (Exothermic reaction ) எனப்படும். இத்தகைய வெப்ப வெளிப்பாடு பொருள்களைக் கரைக்கும் போது அல்லது கலக்கும் போது நிகழும்.
அந்த வகையில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்த கரும்பு சாருடன் தண்ணீர் கலக்கும்போது அது வெப்பத்தை அதிகரித்து வயிற்று வலி மற்றும் தலைவலியை ஏற்படுத்தும். எனவேதான் நீங்கள் இதுபோன்ற பிரச்சனைகளை அனுபவிக்கிறீர்கள். இதை சென்னை வூட்டு க்ளீனிக்கின் நிறுவனர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் பிரீத்தி ஒப்புக்கொள்கிறார்.
View this post on Instagram
எனவே இனி கரும்பு சாப்பிட்டதும் தண்ணீர் குடிப்பதை தவிருங்கள். தண்ணீர் குடித்தே தீருவேன் எனில் கரும்பு சாப்பிடுவதையே தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது..!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Headache, Stomach Pain, Sugarcane Juice