முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Junk Food-ஐ பார்த்தாலே சாப்பிட வேண்டும் என்று தூண்டுகிறதா..? இதுதான் காரணம்..!

Junk Food-ஐ பார்த்தாலே சாப்பிட வேண்டும் என்று தூண்டுகிறதா..? இதுதான் காரணம்..!

ஃபாஸ்ட் புட் அல்லது ஜங்க் புட்

ஃபாஸ்ட் புட் அல்லது ஜங்க் புட்

பெரியவர்கள் மட்டுமல்லாமல் வயது, பாலின பேதமின்றி அனைத்து தரப்பினரும் தெரிந்தே எடுத்துக் கொள்ளும் நஞ்சு எது தெரியுமா? ஃபாஸ்ட் புட் அல்லது ஜங்க் புட் என்று சொல்லக் கூடிய துரித உணவுகள் தான்

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

 சிகரெட், மது போன்றவை உடல் நலனுக்கு கேடு தரும் விஷயம் என்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் பெரும்பாலான ஆண்கள், வெகுசில பெண்கள் அதற்கு அடிமையாகி, அந்தப் பழகத்தை விட முடியாமல் உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

ஆனால், பெரியவர்கள் மட்டுமல்லாமல் வயது, பாலின பேதமின்றி அனைத்து தரப்பினரும் தெரிந்தே எடுத்துக் கொள்ளும் நஞ்சு எது தெரியுமா? ஃபாஸ்ட் புட் அல்லது ஜங்க் புட் என்று சொல்லக் கூடிய துரித உணவுகள் தான். இதயநோய், ஹார்ட் அட்டாக், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், வயிறு சம்பந்தபட்ட பிரச்சினைகள் போன்றவை உருவாகுவதற்கு துரித உணவுகள் தான் காரணம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

தீமை என்று தெரிந்திருந்தும் அதை சாப்பிடத் தூண்டுவது எது? எதனால், அதை மீண்டும், மீண்டும் உட்கொள்ளும் மனநிலைக்கு ஆளாகிறோம் என்பது குறித்து இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

உணவு குறித்த தவறான நம்பிக்கைகள்

ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் சுவையாக இருக்காது என்று நம்மில் பலர் தவறான அபிப்பிராயத்தை கொண்டுள்ளோம். குறிப்பாக, காய்கறி, பழங்கள் போன்றவற்றை ஒதுக்கி வைத்து விடுகிறோம். ஆனால், உண்மை என்ன என்றால், எந்த ஒரு உணவின் சுவையும் நம் நாவினில் ஒட்டுவதற்கு 10, 12 முறை கால அவகாசம் எடுத்துக் கொள்ளும்.

அந்த வகையில், துரித உணவுகளின் சுவை உங்களுக்கு ஒட்டிக் கொண்டது என்றாலும், ஆரோக்கியமான உணவுகளை சுவைபதற்கு நம்மை நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

போதிய தூக்கமின்மை

போதுமான தூக்கமின்மையால் மன அழுத்தம், உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்று நமக்கு தெரியும். ஆனால், தூக்கமின்மையால் தவிப்பவர்கள், அந்த சமயத்தில் வாய்க்கு ருசியாக எதையாவது சாப்பிட வேண்டும் என்று விரும்புவார்கள். உடனே சட்டென்று மனதில் நினைவுக்கு வருவது இந்த துரித உணவுகள் தான்.

சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா கெட்டதா..? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன..?

மன அழுத்தம்

நமக்கு மன அழுத்தம் மிகுதியாக இருக்கிறபோது, கார்டிஸால் என்னும் ஹார்மோன் நம் உடலில் சுரக்கிறது. ஆரோக்கியமற்ற துரித உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தை இது நமக்குள் தூண்டி விடுகிறது. இதன் விளைவாக ஐஸ்க்ரீம், பீட்சா போன்றவற்றை சாப்பிடுகிறோம்.

வேகமாக சாப்பிடுவது

இன்றைய அவசர உலகில், பொறுமையாக சாப்பிட நேரமில்லை என்பது உண்மை தான் என்றாலும், உணவை 32 முறை சவைத்து சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால், 5 நிமிடத்திற்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகின்ற நமக்கு துரித உணவுகள் நல்ல வாய்ப்பாக அமைந்துவிடுகின்றன.

முட்டையை ஒரே மாதிரி சாப்பிட்டு போரடித்துவிட்டதா? இந்த சாலட்களை ட்ரை பண்ணி பாருங்க!

ஹார்மோன் குறைபாடு

கர்ப்ப காலம் மற்றும் மாதவிலக்கு போன்ற காலங்களில் ஏற்படக் கூடிய ஹார்மோன் குறைபாடு காரணமாகவும் துரித உணவுகளை மனம் தேடுகிறது. இச்சமயத்தில் ஏற்படும் சோம்பேறித்தனமும் நாம் துரித உணவு சாப்பிட காரணமாகிறது.

தண்ணீர் மற்றும் புரதம் பற்றாக்குறை

நம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்க வேண்டும் என்றால் அவ்வபோது தண்ணீர் அருந்த வேண்டும். புரதம் மிகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இவை இரண்டும் போதுமான அளவில் இல்லை என்றால் துரித உணவுகளை தேட தொடங்குகிறோம்.

காற்று பிரிவதை தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன..?

நண்பர்களும் காரணம்

அலுவலக நண்பர்கள் அல்லது குடும்ப உறவுகள் மொத்தமாக ஓரிடத்தில் கூடும்போது, யாரோ ஒருவர் துரித உணவை ஆர்டர் செய்யப்போக, ஒட்டுமொத்தமாக மற்ற அனைவரும் அதே உணவை ஆர்டர் செய்து விடுகிறோம்.

First published:

Tags: Food Cravings, Junk food