• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ரீஃபைண்ட் ஆயிலை விட செக்கு எண்ணெய் சிறந்தது.. ஏன் தெரியுமா?

ரீஃபைண்ட் ஆயிலை விட செக்கு எண்ணெய் சிறந்தது.. ஏன் தெரியுமா?

செக்கு எண்ணெய்

செக்கு எண்ணெய்

கொரோனா அச்சுறுத்தல் ஆரம்பமான காலத்தில் இருந்து, இயற்கைப் பயன்பாடுகளின் விழிப்புணர்வு அதிகரித்ததால், செக்கு எண்ணெய் உலகெங்கிலும் உள்ள மக்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  • Share this:
ஒவ்வொரு சமயல் அறையிலும் இருக்கக்கூடிய முக்கியமான மற்றும் அத்தியாவசிய பொருட்களில் எண்ணெயும் ஒன்று. சமையல் எண்ணெய்களைப் பொறுத்தவரை, எது ஆரோக்கியமானது என்பதை தேர்வு செய்வதில் இன்னும் பல குழப்பங்களும் விவாதங்களும் இருக்கத்தான் செய்கின்றன. கனோலா எண்ணெய் முதல் ஆலிவ் எண்ணெய் வரை, சமையல் எண்ணெயைத் தேர்தெடுப்பதில் மக்களுக்கு வெவ்வேறு விருப்பங்கள் உள்ளன. இதேபோன்ற ஒரு விவாதம் ரீஃபைன்ட் ஆயில் என்று சொல்லக்கூடிய சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் செக்கு எண்ணெய்க்கு இடையில் இருக்கிறது. நமது முன்னோர் காலத்தில் செக்கு எண்ணெய் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டது.

பிறகு இதய ஆரோக்கியம் மற்றும் உடலில் கொலஸ்ட்ராலை குறைக்க வல்லது எனக்கூறி செக்கு எண்ணெய் மாற்றாக சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தல் ஆரம்பமான காலத்தில் இருந்து செக்கு எண்ணெய் உலகெங்கிலும் உள்ள மக்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மிகவும் நல்ல விஷயம் என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு காரணம் செக்கு எண்ணெய்யில் சுகாதார நன்மைகளின் ஒரு பட்டியலே இருக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை விட செக்கு எண்ணெய் ஏன் சிறந்தது என்பதை பற்றி பார்ப்போம்.

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் (ரீஃபைண்ட் ஆயில்) மற்றும் செக்கு எண்ணெய் தயாரிக்கும் முறை:

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் அதிக வெப்பத்தைப் பயன்படுத்தி பிரித்தெடுக்கப்படுகின்றன. இது சூடான அழுத்தப்பட்ட எண்ணெய்கள் என்றும் அழைக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் முதலில் அவற்றை சுத்தம் செய்வதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன. பின்னர் அவை அதிவேகமாக அரைக்கப்படுகிறது. அந்த சமயத்தில் சுமார் 200° C வரை வெப்பநிலை உருவாகிறது. இதனால் எண்ணெய்யில் உள்ள உயிர்சத்துக்கள் அழிந்து விடுகின்றன. மேலும் இந்த கலவையுடன் சில ரசாயனங்களும் பயன்படுத்தப்படுகின்றன. அதன் பிறகு நமக்கு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் கிடைக்கிறது.



மறுபுறம், செக்கு எண்ணெய்கள் மரத்தால் ஆனா பெரிய உலக்கையால் மெதுவாக நொறுக்கப்பட்டு அவற்றில் இருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகின்றன. மரச்செக்கின் கீழ்ப்பகுதியும், உலக்கையும் மரங்களில் செய்யப்பட்டிருக்கும். இதனுடன் 3 எச்.பி திறன் கொண்ட மோட்டார் இணைக்கப்பட்டிருக்கும். இச்செக்கின் உலக்கை ஒரு நிமிடத்துக்கு 10 முதல் 14 சுற்றுகள் வரை சுற்றும். இதனால் மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்பொழுது அதிகபட்சம் 35 டிகிரி வரை மட்டுமே வெப்பம் உருவாக்கப்படுகிறது. அதனால், இந்த எண்ணெய்யில் உள்ள உயிர்ச் சத்துகள் ஒருபோதும் அதன் தன்மையை இழக்காது. இது முழுமையாக நமது உடலுக்கும், உயிருக்கும் நன்மையை தருகிறது. இது ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுவைகளைத் தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

மிக்ஸியில் சட்னி அரைக்கிறீர்களா? அம்மிக்கல்லில் அரைப்பதன் நன்மைகள் தெரியுமா..? லாக்டவுன் எடையைக் குறைக்க எக்ஸ்ட்ரா டிப்ஸ்..

செக்கு எண்ணெய் உண்மையில் ஆரோக்கியமானதா?

செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய்கள் நிச்சயமாக சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களை விட ஆரோக்கியமானவை. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் உள்ள பெரும்பாலான சத்துக்கள் அதிக வெப்பம் மற்றும் வேதிப்பொருட்கள் காரணமாக இழக்கப்படுகின்றன. அதுவே செக்கு எண்ணெய் முற்றிலும் வேறுபட்டது. இதன் வெப்பமில்லாத மற்றும் ரசாயனம் இல்லாத உற்பத்தி செயல்முறையின் காரணமாக அவற்றின் பெரும்பாலான ஊட்டச்சத்துக்களைத் தக்க வைத்துக் கொள்கிறது. மேலும் பெரும்பாலான செக்கு எண்ணெய்களில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளன. இது அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஒலிக் அமிலத்தைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.



செக்கு எண்ணெய் வகைகள் மற்றும் அதன் பயன்கள்:

நல்லெண்ணெய் : எள் விதைகளில் இருந்து நல்லெண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இவை இது வைட்டமின் ஈ சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. எள் இயற்கையில் ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றி மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்தியை கொண்டது. செக்கில் தயாரிக்கப்படும் இந்த எண்ணெயில் வைட்டமின் பி 12, வைட்டமின் பி 6 நிறைந்துள்ளன. மேலும் இது வலுவான சுவையை கொண்டது.

தேங்காய் எண்ணெய் : செக்கில் ஆட்டப்பட்ட தேங்காய் எண்ணெய் கோகோசிட்டோலைத் தக்க வைத்துக் கொள்ளும். கோகோசிட்டால் என்பது தேங்காயில் ஏராளமான அளவில் காணப்படும் இயற்கையாக உருவாகும் தாவர ஆல்கஹால் ஆகும். செக்கு தேங்காய் எண்ணெய் உடலில் நல்ல எச்.டி.எல் கொழுப்பை அதிகரிக்கிறது.



ஆளிவிதை எண்ணெய் : செக்கில் ஆட்டப்படும் ஆளிவிதை எண்ணெயில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது வளர்சிதை மாற்ற விகிதத்தை உயர்த்துகிறது. இது கொழுப்பை எரிப்பதை எளிதாக்குகிறது. இது நமது கல்லீரலின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. எண்ணெய் உடலின் ஆற்றல் உற்பத்தியில் உதவுகிறது மற்றும் மனித உடலில் தேவையற்ற நீர் சேருவதை கணிசமாகக் குறைக்கிறது.

கடலை எண்ணெய்: செக்கில் ஆட்டப்படும் நிலக்கடலையில் மாங்கனீசு சத்து அதிகமாக உள்ளது. நாம் உண்ணும் உணவில் உள்ள கால்சியம் சத்துகள் நமது உடலுக்கு கிடைக்கவும் இது பயன்படுகிறது. நிலக்கடலையில் இருக்கும் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடண்ட் நோயிலிருந்து பாதுக்காப்பதோடு இளமையை பராமரிக்க செய்கிறது. 'ரெசவராடால்’ எனும் நோய் எதிர்ப்பு பொருள் கடலை எண்ணையில் காணப்படுகிறது. இது இதய வியாதிகள், புற்றுநோய்க்கு எதிராக செயலாற்றும் தன்மை கொண்டது. மேலும் இதில் வைட்டமின் இ சத்து நிறைந்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: