கோடைக்கால உணவுகளில் தயிர் தவிர்க்க முடியாதது. காரணம் இது உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் புரோபயோடிக் நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக தயிரை கடைந்தெடுக்கும் மோரில் குளுர்ச்சித் தன்மை இருப்பதால் உடல் உஷ்ணத்தை நீக்கி எப்போதும் உடலின் நீரேற்றத்தை தக்க வைக்கிறது. ஆனால் எல்லோருக்கும் தயிர் உகந்ததா..? யாரெல்லாம் தவிர்ப்பது நல்லது..? போன்ற கேள்விகளுக்கு இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பாலில் தண்ணீர் ஊற்றாமல் நன்கு காய்ச்சி உறை மோர் ஊற்றி மறுநாள் காலை பார்த்தால் கெட்டியான தயிர் கிடைக்கும். இதை மண் பானையில் ஊற்றி தயிராக்கினால் கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கும்.
தயிர் என்பது குளுர்ச்சியான உணவு என்பதால் அதை சூடான உணவுடன் கலப்பது தவறு. அதேபோல் அதை எண்ணெய் ஊற்றி தாளித்து சூடாக தயிர் மோரில் ஊற்றுவதும் தவறானது என்கின்றனர். எனவே தயிரை அப்படியே அதன் குளுர்ச்சி தன்மை மாறாமல் சாப்பிடுவது நல்லது.
உறைந்த தயிரை காலையில் எடுத்து பார்க்கும்போது அதன் மீது தெளிந்த நீர் இருக்கும். அதை அப்படியே லாவகமாக ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதை குடித்தால் தொண்டை எரிச்சல், குமட்டல், உடல் சூடு நீங்கும்.
உடல் வெப்பத்தை குறைக்க கெட்டி தயிரை ஒரு வெள்ளை பருத்தி துணியில் ஊற்றி அதன் நீரை ஒரு பாத்திரத்தில் சொட்ட விடுங்கள். அவ்வாறு சேகரித்த நீரில் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து ஏலக்காய் தட்டிப்போட்டு குடித்தால் உடல் உஷ்ணம் நீங்கும்.
Also Read : சுகர் இருக்கவங்க கோடையில் கற்றாழை ஜூஸ் தினமும் குடித்தால் கன்ட்ரோல் ஆகுமா..?
யாரெல்லாம் தயிர் சாப்பிடக்கூடாது..?
நன்கு புளித்த தயிரை இரத்த அழுத்தம், பித்தக்கோளாறு, வயிற்றுக்கோளாறு உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. ஃபிரிட்ஜில் வைத்த குளுர்ச்சியான தயிரை உடனே உணவில் சேர்த்து சாப்பிடக்கூடாது. இதனால் ஏற்கெனவே அஜீரணக் கோளாறு, மூச்சிறைப்பு, இரத்த சோகை , மஞ்சள் காமாலை நோய் இருப்பவர்களுக்கு நல்லதல்ல. மோராக அருந்தும்போது அதில் சீரகம் , பெருங்காயம் சேர்த்து குடிப்பது நல்லது. வேறு ஏதேனும் பாதிப்புகள் இருப்பின் மருத்துவர்களுடன் கலந்து ஆலோசித்த பின் சாப்பிடுவது நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Curd, Summer Food, Yogurt