Home /News /lifestyle /

ஆரோக்கியம் மற்றும் உடல் எடை குறைப்புக்கு உதவும் பருப்பு வகைகளை பற்றி தெரியுமா.?

ஆரோக்கியம் மற்றும் உடல் எடை குறைப்புக்கு உதவும் பருப்பு வகைகளை பற்றி தெரியுமா.?

பருப்பு

பருப்பு

துவரம் பருப்பு சாப்பிடுவதால் எடை குறைப்பு மட்டுமல்லாமல், வேறு பல பலன்களும் நமக்கு கிடைக்கின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
சுட, சுட சோறு, அதனுடன் வெந்து மசிந்த பருப்பு, கொஞ்சம் நெய் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டது உண்டா? இந்த உணவுக்கு ஈடு, இணை வேறெதுவுமே இருக்க முடியாது. இந்த உணவை சமைக்கும் முறை மிக எளிமையானது. அதே சமயம், இது உடல் நலத்திற்கு உகந்தது என்றும், எடை குறைப்பிற்கு உகந்தது என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இங்கு தான் குழப்பம் ஆரம்பம் ஆகிறது.

பருப்பில் என்ன ஒரு வெரைட்டி மட்டுமா இருக்கிறது. ஏகப்பட்ட வெரைட்டிகள் உள்ளன. இதில் எந்த வகை பருப்பு உங்களுக்கு எடை குறைக்க உதவும் என்ற கேள்வி வரும் தானே? மொத்தம் 10க்கும் மேற்பட்ட பருப்பு வகைகள் உள்ளன. ஒவ்வொரு பருப்பும் ஒவ்வொரு சுவை கொண்டது, வெவ்வேறு உடல் நன்மைகளை உடையது. ஆகவே, எந்தப் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற குழப்பம் உங்களுக்கு இருந்தால், அதற்கான விடை இந்தச் செய்தியில் காத்திருக்கிறது.

உடல் எடை குறைக்க உதவும் பருப்பு வகை

பொதுவாக, பருப்பு வகைகளில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இது மட்டுமல்லாமல் எண்ணற்ற விட்டமின்கள் மற்றும் மினரல் சத்துக்கள் நிரம்பியுள்ளன. பொதுவாகவே, இந்த பருப்பு மட்டும் தான் ஊட்டச்சத்து அதிகம் உள்ளது, இதைத்தான் நீங்கள் நிறைய சாப்பிட வேண்டும் என்று கட்டுப்படுத்டிஹ்க்கொள்ள வேண்டாம். அனைத்து வகை பருப்புகளையும் நீங்கள் அவ்வபோது எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், உடல் எடையை குறைக்க எது உதவிகரமாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தால், அதற்கு சரியான பதில் துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பு என்பதே ஆகும். இந்தப் பருப்புகளில் மிக குறைவான கலோரிகளே உள்ளன. மற்ற பருப்பு வகைகளை காட்டிலும் எளிமையாக ஜீரணம் ஆகிவிடும். ஆகவே, மலச்சிக்கல் என்ற பிரச்சினை இருக்காது.



துவரம் பருப்பில் உள்ள ஊட்டத்துக்களின் அளவு

ஒரு கப் துவரம் பருப்பு (200 கிராம்) கொண்டுள்ள சத்துக்களின் பட்டியல்

  • கலோரி - 212

  • கொழுப்பு - 0.8 கிராம்

  • புரதம் - 14.2 கிராம்

  • மாவுச்சத்து - 38.7 கிராம்

  • நார்ச்சத்து - 15.4 கிராம்


இது மட்டுமல்லாமல் துவரம் பருப்பில் ஃபோலேட், மேங்கனீஸ், விட்டமின் பி1, பாஸ்பரஸ், இரும்புசத்து, காப்பர், பொட்டாசியம் மற்றும் ஸிங்க் ஆகியவை உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு, உடல் உறுப்புகளின் இயக்கத்தை மேம்படுத்துகின்றன.

கடலை எண்ணெய் சமையலுக்கு நல்லதா..? பகீர் உண்மைகளை வெளியிடும் நிபுணர்கள்..!

பிற பலன்கள்

துவரம் பருப்பு சாப்பிடுவதால் எடை குறைப்பு மட்டுமல்லாமல், வேறு பல பலன்களும் நமக்கு கிடைக்கின்றன. இதில் உள்ள நார்ச்சத்து என்பது, உடலில் கெட்ட கொழுப்பு சேர விடாமல் தடுப்பு, இதய நலனை மேம்படுத்தும். இது மட்டுமல்லாமல் தோளில் ஏற்படும் சுருக்கங்களை தடுத்து, உங்களை என்றும் இளமையாக காட்டிக் கொள்ள இது உதவும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Dal Benefits, Grains, Millets

அடுத்த செய்தி