இந்த கோதுமை புட்டை காலை உணவாகவும் சாப்பிடலாம் அல்லது மாலையில் ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம். எதுவாயினும் கோதுமையின் நன்மைகள் கிடைக்கும். அதிலும் ஆவி கட்டி சாப்பிடும்போது அதன் பலன்களும் குறைவின்றி கிடைக்கும். அதுமட்டுமன்றி புட்டுக்கென தனியாக மாவு அரைக்கவோ, வாங்கவோ தேவையில்லை. எப்போதும் வீட்டில் இன்ஸ்டண்டாக இருக்கும் கோதுமை மாவிலேயே செய்வது வேலையும் மிச்சம், நேரமும் மிச்சம். சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை - 1 1/2 கப்
உப்பு - 1 சிட்டிகை
துருவிய தேங்காய் - 1/2 கப்
சர்க்கரை அல்லது வெல்லம் - தே.அ
நெய் - 1 ஸ்பூன்
செய்முறை :
கோதுமை மாவு பிசைய அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்துவிடுங்கள்.
பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பிசைய வேண்டும். மாவு உதிரி உதிரியாக இருக்க வேண்டும். அதே சமயம் கையில் பிடித்தாலும் ஒட்ட வேண்டும்.
மாவு நன்கு உதிரியாக பிசைந்துகொண்டதும் புட்டு செய்யும் பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
அதன் குழலில் முதலில் துருவிய தேங்காயை நிரப்புங்கள். அடுத்ததாக மாவை நிரப்புங்கள். பின் மீண்டும் தேங்காய் வையுங்கள்.
பின் ஸ்டீமரில் வைத்து 8-10 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுங்கள்.
நன்கு வெந்ததும் அதில் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் நெய் கலந்து சாப்பிடுங்கள்.
அவ்வளவுதான் கோதுமை புட்டு தயார்..!
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.