Home /News /lifestyle /

சமைக்க, சிக்கன், மீன் வறுக்க எந்த எண்ணெய் பெஸ்ட்..?

சமைக்க, சிக்கன், மீன் வறுக்க எந்த எண்ணெய் பெஸ்ட்..?

Youtube Video

ரீஃபைண்ட் எண்ணெய்தான் அதிக கொழுப்பை உண்டாக்கும் என மாற்று எண்ணெய்களையும் பரிந்துரைக்கின்றனர். உண்மையிலேயே எண்ணெய்யை மாற்றினால் உடல் பாதிப்புகள் வராதா..?

  • News18
  • Last Updated :
    எண்ணெய் அதிகமாகப் பயன்படுத்தினால் கொழுப்புச் சத்து அதிகரிக்கும். அதனால் இதய நோய் வரும், உடல் எடை அதிகரிக்கும், இரத்த அழுத்தம் வரும், முகப்பருக்கள் வரும் என பல பிரச்னைகள் வரும் என்பதாலேயே எண்ணெய் பயன்படுத்தும் போது அளவாகப் பயன்படுத்துவார்கள்.

    தற்போது தினசரி சமையலுக்கு பயன்படுத்தும் ரீஃபைண்ட் எண்ணெய்தான் அதிக கொழுப்பை உண்டாக்கும் என மாற்று எண்ணெய்களையும் பரிந்துரைக்கின்றனர். உதாரணமாக ஆலிவ் எண்ணெய், அவகோடா எண்ணெய், தேங்காய் எண்ணெய் என பயன்படுத்தச் சொல்லி பரிந்துரைப்பதால் பலரும் ஆரோக்கியத்தின் பயத்தால் மாற்று வழிக்கு மாறி வருகின்றனர். உண்மையிலேயே எண்ணெய்யை மாற்றினால் உடல் பாதிப்புகள் வராதா..?

    அது முற்றிலும் தவறு. எண்ணெய்யை மாற்றிப் பயன்படுத்துவதால் எந்த நிலையும் மாறாது. இதுதான் சமைப்பதற்கான ஆரோக்கியம் நிறைந்த எண்ணெய் என்று எதுவுமே இல்லை. அப்போ என்னதான் வழி..?



    அதாவது..எண்ணெய்யை நீங்கள் சூடு படுத்தும் முறையில்தான் அதன் ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது. ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒரு சூடு பதம் இருக்கிறது. இதை ஆங்கிலத்தில் smoke point என்று கூறுவார்கள். அந்தக் கோட்டைத் தாண்டி எண்ணெய்யை சூடு படுத்தினால் அது ஆரோக்கியமற்றதே.

    உதாரணமாக சிக்கன் , மட்டன் என எண்ணெயில் பொறித்து எடுக்க வேண்டுமெனில் அதன் சூடு பதம் 176 முதல் 204 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உணவு எளிதில் எண்ணெயை உறிஞ்சாது. அவகோடா எண்ணெய் 271 டிகிரியாகவும், தேங்காய் எண்ணெய் மற்றும் வெண்ணெய் 177 டிகிரியாகவும், சூரிய காந்தி எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் 232 டிகிரியாகவு, ஆலிவ் எண்ணெய் 160 டிகிரியாகவும் இருக்க வேண்டும்.

    இப்படி மேலே குறிப்பிட்ட அளவுகளுக்குள் எண்ணெய்யின் வெப்ப அளவு இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த எண்ணெய் ஆரோக்கியமானதாகவும், சுவையானதாகவும் இருக்கும்.




    லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி