முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சர்காடியன் ரிதம் உணவு முறை உடல் ஆரோக்கியத்திற்கு உதவுமா..? முழுமையான தகவல்..!

சர்காடியன் ரிதம் உணவு முறை உடல் ஆரோக்கியத்திற்கு உதவுமா..? முழுமையான தகவல்..!

Circadian Eating

Circadian Eating

நாம் பொதுவாக பகலில் நமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம், மேலும் உடலுக்கு அதிகபட்ச ஆற்றல் தேவைப்படுகிறது, எனவே காலை உணவு மற்றும் மதிய உணவு இன்றியமையததாக உள்ளது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாம் வாழ்க்கை முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உணவு தான் முக்கிய பங்காற்றுகிறது. ஒவ்வொரு நாளும் புதுவிதமான நோய்களினால் நாம் பாதிப்பிற்கு உள்ளாகும் போது தான், முன்னோர்களின் வாழ்க்கை முறையை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு தள்ளப்படுகிறோம். ஆம் அதிகாலையில் விழித்தல், இரவில் சீக்கிரம் தூங்கச்செல்வது மற்றும் சரியான நேரத்தில் சரியான விகிதத்தில் சாப்பிட்டதன் பலன் தான் இன்றைக்கும் நம்முடைய முன்னோர்களின் உடல் ஆரோக்கியமாக உள்ளது.

இந்நிலையில் தான் உடலை நாம் எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், சர்காடியன் ரிதம் உணவு முறையை (Circadian Rhythm eating plan)  நாம் பின்பற்ற வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். முதிலில் சர்காடியன் ரிதம் உணவு விகிதம் மற்றும் முறை என்றால் என்ன? என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.

சர்காடியன் ரிதம் உணவு முறை (Circadian Rhythm eating plan):

சர்காடியன் ரிதம் உணவு முறை என்பது பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். இந்த நடைமுறையின் படி நாம் சாப்பிடும் உணவு முறை என்பது 10-12 மணி நேரத்திற்குள் இருக்க வேண்டும். அதாவது நீங்கள் காலையில் உங்களது உணவை அல்லது காபியை நீங்கள் காலையில் 7 மணிக்கு சாப்பிடுகிறீர்கள் என்றால், அதே நேரத்தில் அதாவது மாலை 7 மணிக்குள் உங்களது இரவு நேர உணவை நீங்கள் சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும். இவ்வாறு நீங்கள் செய்யும் போது உங்களின் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு தேவையில்லாத கலோரிகள் உடலில் சேர்வதையும் நாம் தடுக்க முடியும்.

சர்காடியன் ரிதம் உணவு முறையை நீங்கள் பின்பற்றும் போது, இன்சுலின் உணர்திறன் அதிகரிப்பு மற்றும் குறைந்த மெலடோனின் அளவுகளுடன், ஒளி வெளிப்பாட்டிற்கு எதிர்வினையாக அமைகிறது. அதாவது மெலடோனின் என்பது இருளுக்கு எதிர்வினையாக நமது மூளையால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன் ஆகும். இது சர்க்காடியன் முறை மற்றும் தூக்க சுழற்சியை ஒத்திசைக்கிறது. எனவே, பகலில் வெளிச்சத்திற்கு வெளிப்படும் போது நமது மெலடோனின் குறைகிறது, அப்போதுதான் நாம் மிகவும் எச்சரிக்கையாகவும், உற்சாகமாகவும் உணர்கிறோம்.

நாம் பொதுவாக பகலில் நமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம், மேலும் உடலுக்கு அதிகபட்ச ஆற்றல் தேவைப்படுகிறது, எனவே காலை உணவு மற்றும் மதிய உணவு இன்றியமையததாக உள்ளது. எனவே நீங்கள் காலையில் எப்போது நட்ஸ், முட்டைகள், வெண்ணெய் டோஸ்ட் போன்ற உணவுப் பொருள்களை நீங்கள் சாப்பிடலாம். மதிய உணவில் காய்கறிகள், தானியங்கள் மற்றும் புரதம் கொண்ட ஒரு சீராக இருக்க வேண்டும்.

Also Read : டாஷ் டயட் என்றால் என்ன? இதற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் என்ன தொடர்பு?

இதோடு இரவு நேர உணவுகள் எப்போதும் இலகுவாகவும், சூப்கள், பருப்பு வகைகள் மற்றும் சமைத்த கீரைகளுடன் இருக்க வேண்டும். இவ்வாறு நீங்கள் சாப்பிடும் போது உங்கள் உடலில் மெட்டபாலிசத்தை மீட்டமைக்கவும், உறக்க சுழற்சியை நன்றாக மாற்றவும் சர்காடியன் ரிதம் உணவு முறை சரியானது. மேலும் இது உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற வளர்சிதை மாற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்றதாக அமைகிறது.

First published:

Tags: Diet, Diet Plan, Diet tips