முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இறாலில் கருப்பு நிறத்தில் உள்ள நரம்புகளை சுத்தம் செய்யவில்லை எனில் என்ன ஆகும்..? எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள்!

இறாலில் கருப்பு நிறத்தில் உள்ள நரம்புகளை சுத்தம் செய்யவில்லை எனில் என்ன ஆகும்..? எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள்!

இறால்

இறால்

இறால்களில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியிருந்தாலும் முறையாக கிளீன் செய்யாமல் சாப்பிடும் போது உடனடியாக எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது. ஆனால் குடலில் செரிமானம் பாதிப்புகள் அதிகளவில் ஏற்படக்கூடும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.

 • Last Updated :
 • Tamil Nadu, India

இறால்களில் உள்ள கருப்பு நூல் போன்றுள்ள நரம்புப் பகுதியை சரியாக அகற்றாமல் சமைத்துச் சாப்பிடும் போது, ஒவ்வாமை, தொண்டை அடைப்பு, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.

கடல் உணவுகளில் நமது உடலுக்குத் தேவையான எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. மீன், நண்டு, இறால் என கடல் உணவுகளின் வகைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம். இதில் முக்கியமானது இறால். மீன்களில் உள்ளது போன்று முட்கள் எதுவும் இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச்சாப்பிடும் கடல் உணவுகளில் ஒன்றாக உள்ளது.

இதோடு அதிகளவு புரதம், வைட்டமின் டி , கால்சியம், பொட்டாசியம் உள்ளதால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நமக்கு ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் உடல் எடையைக் குறைக்கவும், கனிமங்கள் முடி வளர்ச்சி மற்றும் தசை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தன்னக்கத்தே கொண்டுள்ள இறால்களை முறையாக சுத்தம் செய்யாமல் சாப்பிடும் போது, தேவையற்ற உடல் நலப்பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். எனவே இந்நேரத்தில் இறால்களை முறையாக சுத்தம் செய்யாமல் சாப்பிட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இறால் சுத்தம் செய்யும் முறை குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

டைனிங்கை விட சம்மணங்கால் போட்டு சாப்பிடுவதுதான் நல்லது : விளக்கும் ஊட்டச்சத்து நிபுணர்...

இறால்களின் நரம்புகளை நீக்காமல் சாப்பிட்டால் ஏற்படும் பாதிப்புகள்:

இறால்களில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியிருந்தாலும் முறையாக கிளீன் செய்யாமல் சாப்பிடும் போது உடனடியாக எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது. ஆனால் குடலில் செரிமானம் பாதிப்புகள் அதிகளவில் ஏற்படக்கூடும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். இதனால் தான் இறால்களின் நரம்புகளை நீக்காமல் சாப்பிடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது. ஏனென்றால் உடலில் அலர்ஜி, மூச்சுத்திணறல், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுமாம். சில சமயங்களில் மரணம் கூட ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால் இதற்கான ஆய்வுகள் இன்னமும் நடைபெற்று வருகிறது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எஞ்சிய காஃபி தூளை வீணாக குப்பையில் போடுறீங்களா..? இப்படி யூஸ் பண்ணுங்க...

இறால் சுத்தம் செய்யும் முறை:

இறாலை ஒடும் நீரில் கழுவி சுத்தம் செய்யும் போது இறால் நரம்புகள் உள்பட தேவையற்ற பகுதியை எழுதில் பிரித்து எடுத்துவிட முடியும். ஒருவேளை உங்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் வீட்டிலேயே சுலபமாக இறாலை சுத்தம் செய்துவிடலாம்.

top videos

  சுத்தம் செய்யும் முறை :

  இறால்களை முதலில் ஒரு பவுலில் எடுத்துக் கொண்டு குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
  பின்னர் இறால்களில் உள்ள தண்ணீரை நன்றாக வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் கத்தி அல்லது நமது கைகளாலே இறாலின் தலைப்பகுதியைத் துண்டிக்க வேண்டும். வால் பகுதியையும் கையில் பிய்த்து எடுக்க வேண்டும்.
  இப்போது மிகவும் சுலபமாக நடுப்பகுதியில் உள்ள தோலையும் நீக்க முடியும். இந்த செயல்முறைகள் அனைத்தும் முடிந்த பின்னர் தற்போது இறாலின் மேல்பகுதியில் கருப்பு கலரில் நூல் போன்றுள்ள அதாவது இறாலின் நரம்புகளைப் பிரித்தெடுக்க வேண்டும்.
  இறால் நரம்புகளைப் பிரித்தெடுக்கும் போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். இல்லாவிடில் இறாலில் பாதி நரம்புகள் தங்கிவிடும். இது நீங்கள் இறால் சமைத்து சாப்பிடும் போது உங்களுக்கு கசப்புத் தன்மையைக் கொடுப்பதோடு உங்களது ஆரோக்கியத்தியத்திற்கும் கேடு விளைவிக்கும்.
  இது போன்று இறால்களில் உள்ள தேவையற்ற பகுதிகளையெல்லாம் பிரித்தெடுத்த பின்னர் இறுதியில் குளிர்ந்த நீரில் ஒரு துளி உப்பு, மஞ்சள் சேர்த்து நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் இல்லாதபடி தனித்தனியாக பிரித்தெடுத்து வைத்து உங்களது விருப்பத்திற்கேற்ப சமைத்துச் சாப்பிடலாம்.
  First published:

  Tags: Health tips, Prawn Recipes