ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பாதாமை ஏன் தோல் உறித்து சாப்பிட வேண்டும்..? அப்படியே சாப்பிட்டால் என்ன ஆகும்..?

பாதாமை ஏன் தோல் உறித்து சாப்பிட வேண்டும்..? அப்படியே சாப்பிட்டால் என்ன ஆகும்..?

பாதாமை ஏன் தோல் உறித்து சாப்பிட வேண்டும்..?

பாதாமை ஏன் தோல் உறித்து சாப்பிட வேண்டும்..?

பாதாமின் தோல் கடினமானதாக இருக்கும். அதை ஊற வைத்து உறிக்கும்போதும் அதன் தோல் தடிமனாக இருக்கும். இப்படி கடினமான தோலை அப்படியே சாப்பிடுவதால் செரிமானிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நட்ஸ் வகைகளில் பாதாமை மட்டும் இரவு முழுவது ஊற வைத்து மறுநாள் காலை அதன் தோலை நீக்கிவிட்டுதான் சாப்பிட வேண்டும். ஆனால் அவ்வாறு ஏன் சாப்பிடுகிறோம் என தெரியுமா..?

பாதாமை ஏன் ஊற வைத்து சாப்பிட வேண்டும்..?

பாதாமின் தோல் கடினமானதாக இருக்கும். அதை ஊற வைத்து உறிக்கும்போதும் அதன் தோல் தடிமனாக இருக்கும். இப்படி கடினமான தோலை அப்படியே சாப்பிடுவதால் செரிமானிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும்.

அதிலும் செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கு தேவையற்ற பக்கவிளைவுகளை உண்டாக்கும். எனவேதான் ஊற வைத்து அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும் என்கிறனர். ஊற வைப்பதற்கான முதன்மை காரணமும் அதன் தோலை எளிதில் நீக்க முடியும் என்பதற்காகத்தான். அது இரவு முழுவதும் ஊறினால்தான் காலையில் உறிக்கும் போது எளிமையாக இருக்கும்.

பாதாம் தோலை நீக்காமல் சாப்பிட்டால் என்ன ஆகும்..?

செரிமானிக்க கடினமாக இருக்கும். இதன் பக்கவிளைவாக வயிற்று மந்தம், வயிற்றுப்போக்கு போன்ற கோளாறுகள் உண்டாகலாம். அதுமட்டுமன்றி அதில் இருக்கும் ஆன்டி நியூட்ரியண்ட்ஸ் , டானிக் மற்றும் ஃபைடிக் அமிலம் போன்றவை தோலில் இருப்பதால் அவை ஊட்டச்சத்து உறிஞ்சுவதை தடுக்கிறது. இரத்தத்தில் பித்தம் அதிகரிக்கலாம். எனவே அதன் தோலை இரவு முழுவதும் ஊற வைத்து அதன் தோலை நீக்கிவிட்டுதான் சாப்பிட வேண்டும்.

ஒரு நாளைக்கு எவ்வளவு பாதாம் சாப்பிடலாம்..?

தினமும் 5- 10 பாதாம் வரை சாப்பிடலாம். அதுவும் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் தோல் உறித்த பின்னரே சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டால் அன்றைய காலை ஆற்றல் மிக்கதாகவும், சுருசுருப்பாகவும் உணர்வீர்கள்.

Also Read : இந்த பிரச்சனை இருப்பவர்கள் காளான் சாப்பிடுவதை தவிர்பது நல்லது : எப்போது ஆபத்தாக மாறும்..?

பாதாம் புரதச்சத்து, நார்ச்சத்து, விட்டமி ஈ, ஒமேகா 3, ஒமேகா 6 , மெக்னீசியம், கால்சியம் , இரும்பு, பொட்டாசியம் மற்றும் ஸிங்க் போன்ற ஊட்டச்சத்துக்களை நிறைவாக கொண்டுள்ளது. எனவே தினமும் குறைந்தது 5 பாதாம் சாப்பிட்டு வர ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்கலாம்.

அதுமட்டுமன்றி பாதாம் மூளை மற்றும் நரம்புகளுக்கு நல்லது. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. தசைகளுக்கு வலு சேர்க்கிறது. வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

First published:

Tags: Almond