கிட்னி பீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் அட்டகாசமான நன்மைகள் இதோ...

கிட்னி பீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் அட்டகாசமான நன்மைகள் இதோ...

கிட்னி பீன்ஸ்

உங்கள் அன்றாட உணவில் கிட்னி பீன்ஸை சேர்த்துக்கொண்டால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்..

  • Share this:
நம் அன்றாட வாழ்க்கையில் அனைவரும் சாப்பிடக்கூடிய மிகவும் பொதுவான உணவு சத்துமிக்கதா? பெரும்பாலான மக்கள் தங்கள் உணவை உற்சாகமாக சாப்பிடுகிறீர்களா? என்றால் பாதிக்கும் மேல் பதில் இல்லை என்றுதான் வரும். புரதம் நிறைந்த பருப்பு வகைகள், பயறு வகைகள் என எல்லாமே உடலுக்கு தேவை. இந்த புரதங்கள் தாவரங்களில் இருந்து தான் பெரும்பாலும் பெறப்படுகிறது. இப்போது மக்களிடையே மிகவும் பிரபலமாகிவரும் ஒரு வட இந்திய உணவு பொருளை பற்றித்தான் நாம் காணப்போகிறோம். 

பெரும்பாலான வட இந்திய வீடுகளில் கிட்னி பீன்ஸ் முக்கிய உணவாக விரும்பப்படுகிறது. அவை அற்புதமான சுவையை தருவது மட்டுமல்லாமல் அதிக ஊட்டச்சத்தையும் கொண்டுள்ளன. இப்போது மார்க்கெட்டில் பல வகையான கிட்னி பீன்ஸ் உள்ளன. அதில்  கலர் மற்றும் டேஸ்ட் ஒன்றுக்கொன்று மாறுபடலாம், ஆனால் அது அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள் அனைத்தும் ஒன்றே. உங்கள் அன்றாட உணவில் கிட்னி பீன்ஸை சேர்த்துக்கொண்டால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள் என்று இங்கே காண்போம். 

கிட்னி பீன்ஸில் இருக்கும் சத்துகள்:

பீன்ஸ் வகைகள் பல உண்டு. கிட்னி பீன்ஸ் நம் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான முக்கியமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது. அதிக செலவில்லாமல் குறைந்த செலவில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து, ஃபோலெட், பாஸ்பரஸ், தாமிரம், புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், மாலிப்டினம் மற்றும் வைட்டமின் B1, வைட்டமின் B சத்தை கொண்டிருக்கிறது. இதில் 9% புரதம் இருப்பதால் நான்-வெஜ் சாப்பிடாதவர்களுக்கு தேவையான பலனை கிட்னி பீன்ஸ் அளிக்கிறது. ஒரு கப் பீன்ஸ் தினசரி தேவையான ஊட்டச்சத்தில் 40% க்கும் அதிகமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை கொண்டிருக்கிறது. பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை தன்னுள் கொண்டிருக்கும் இந்த பீன்ஸ் உடலுக்கு தரும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

நீரிழிவு இருப்பவர்களுக்கு நல்லது : 

கிட்னி பீன்ஸில் இருக்கும் நார்ச்சத்துகள் நீரிழிவை நிர்வகிக்கவும் அதன் தீவிரத்தை குறைக்கவும் உதவும். இந்த உணவில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்துகள் உடலில் இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. குளுக்கோஸின் அதிகப்படியான ஆபத்துகளை குறைத்து ஆற்றல் அளவை மேம்படுத்தவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:

வைட்டமின் C நிறைந்த காய்கறிகள், பழங்களில் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி உண்டு. அதே போன்று ஒவ்வொரு கப் கிட்னி பீன்ஸிலும் தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவில் 10% நோய் எதிர்ப்பு சக்தி குணங்கள் உள்ளது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது. மேலும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்க செய்கிறது. வெளியிலிருந்து உடலுக்குள் ஊடுருவ முயற்சிக்கும் நோய்க்கிருமிகளை எதிர்ப்பதோடு உடலில் கொலாஜன் உற்பத்தியிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

கொழுப்பை குறைக்க உதவும்:

அதிகப்படியான எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஆகியவை நாள்பட்ட நோய்களுக்கு ஒரு காரணம். கிட்னி பீன்ஸ் உண்மையில் உடல் எடையை சீராக்க உதவுகிறது. கிட்னி பீன்ஸ் நார்ச்சத்து நிறைந்தது என்பது போன்றே இது எல்டிஎல் என்னும் கொழுப்பின் அளவை குறைக்கவும் செய்கிறது. இதனால் இதய நோய்கள் இதய கரோனரி அபாயம் குறைகிறது. உடலில் கொழுப்பின் அளவை ஆரோக்கியமாக சமநிலைப்படுத்த பெருந்தமனி, தடிப்புத்தோல் அழற்சி மற்றும் மாரடைப்பால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.

பெருங்குடல் புற்றுநோயை தடுக்கிறது:

பெருங்குடல் புற்றுநோய் உலகில் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாகும். இருப்பினும், கிட்னி பீன்ஸ் போன்ற பருப்பு வகைகளை உட்கொள்வதன் மூலம் ஒருவர் அதன் அபாயத்தை குறைக்க முடியும். நம் உணவில் வழக்கமாக பீன்ஸ் உட்கொள்வது பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன, ஏனெனில் அவை புற்றுநோய்க்கு எதிரான விளைவுகளைக் கொண்ட பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளன. (கலிஃபோர்னியாவின் புற்றுநோய் தடுப்பு நிறுவனம் மற்றும் ஸ்டான் போர்டு பல்கலைக்கழம் 2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பீன்ஸ் மற்றும் தானியங்கள் ஹார்மோன் ஏற்பி எதிர்மறை மார்பக புற்றுநோயின் அபாயத்தை குறைக்க உதவுவதாக கண்டறிந்தது)

டிப்ஸ்: கிட்னி பீன்ஸை இரவே ஊறவைத்துவிட்டு மறுநாள் காலை சமைக்கவேண்டும் அப்போது தான் அதன் முழு பலன் கிடைக்கும்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published: