Home /News /lifestyle /

வெங்காயம் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுமா..? தெரிந்துகொள்ளுங்கள்

வெங்காயம் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுமா..? தெரிந்துகொள்ளுங்கள்

உடல் எடையை குறைக்கும் வெங்காயம்

உடல் எடையை குறைக்கும் வெங்காயம்

வெங்காயம் குறைவான கலோரிகளை கொண்டுள்ளது. கரையும் தன்மை கொண்ட நார்சத்துகளை மிகுதியாக உடையது. ஆகவே, இது நல்லதொரு சத்தான உணவு பொருளாக கருதப்படுகிறது.

உடல் எடையை குறைக்க நாம் முயற்சிகளை எடுக்கும்போது கட்டாயம் சில உணவுகளை தவிர்க்க வேண்டியிருக்கும். அதே சமயம், சில உணவுகளை நமது டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும். நாம் தினசரி சாப்பிடும் பல உணவுகள் உடல் எடையை குறைக்க உதவும் என்பதை நம்மை அறியாமலே நாம் செய்து வருகிறோம்.

அதே சமயம், உடல் எடை குறைப்புக்கு உதவும் உணவுகளை நாம் சரியான முறையில் உட்கொண்டால் நமக்கு மிகுந்த பலன்களை கொடுக்கும். அத்தகைய உணவுப் பொருள்களில் ஒன்றுதான் வெங்காயம்.

இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் அனைவரது சமையல் அறைகளில் கட்டாயம் தவறாமல் இடம்பெற்றிருக்கும் பொருள்களில் ஒன்றுதான் வெங்காயம். இது உடல் எடையை குறைக்க உதவும் என்பது பலருக்கு தெரிவதில்லை. குறிப்பாக, தொப்பையில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும் என்பது பலருக்கு தெரியாது.



வெங்காயத்தின் பலன்கள் :

வெங்காயம் குறைவான கலோரிகளை கொண்டுள்ளது. கரையும் தன்மை கொண்ட நார்சத்துகளை மிகுதியாக உடையது. ஆகவே, இது நல்லதொரு சத்தான உணவு பொருளாக கருதப்படுகிறது.

நறுக்கிய ஒரு கப் வெங்காயத்தில் 64 கலோரிகள், 15 கிராம் மாவுச்சத்து, 16 கிராம் கொழுப்பு, 7 கிராம் நார்ச்சத்து, 76 கிராம் புரதம், 78 கிராம் சர்க்கரை, 12 சதவீத விட்டமின் சி ஆகியவை நிரம்பியுள்ளன. அதேபோன்று வைட்டமின் பி6 மற்றும் மேங்கனீஸ் ஆகிய சத்துக்களும் உள்ளன.

மாதவிடாயை இயற்கையான முறையில் தாமதப்படுத்த உதவும் சிம்பிள் டிப்ஸ்..!

மிக குறைவான அளவில் கால்சியம், இரும்புச்சத்து, ஃபோலேட், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன.

வெங்காயத்தின் பிற பலன்கள் :

வெங்காயத்தில் இன்சுலின் மற்றும் ஃப்ரக்டோலிகோசாகரைட்ஸ் என்ற சத்துக்கள் உள்ளன. இது குடல் நலனை காக்க உதவும். இது மட்டுமல்லாமல் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வயிற்றுக்கு தேவையான நல்ல நுண்ணுயிரிகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.



வெங்காய ஜூஸ் :

வெங்காயத்தின் பலன்களை நேரடியாகப் பெறுவதற்கு ஜூஸ் அருந்தலாம். வெங்காயத்தை உரித்து, துண்டு, துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் 5 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். அந்த தண்ணீரையும் ஜூஸுடன் சேர்த்து கொள்ளலாம்.

தண்ணீர் குடிப்பதால் இரத்த அழுத்தம் குறையுமா..? ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்க வேண்டும்..?

வெங்காய சூப் :

கொஞ்சம் எண்ணெய் விட்டு, அதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், காய்கறிகள், தக்காளி போன்றவற்றை சேர்த்து வதக்கம். காய்கறி oபிடிக்காதவர்கள் கோழி அல்லது மட்டன் எலும்பு துண்டுகளை சேர்த்துக் கொள்ளலாம். கொஞ்சம் உப்பு மற்றும் மிளகு சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். சூடு ஆறிய பிறகு பரிமாறவும்.



பச்சை வெங்காயம் :

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதன் மூலமாக அதன் சத்துக்கள் நமக்கு நிறையவே கிடைக்கும். நறுக்கிய வெங்காயத்துடன் எலுமிச்சை சாறு, சிட்டிகை உப்பு போன்றவற்றை சேர்த்து பிசறி, சாலட் போல சாப்பிடலாம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Onion, Weight loss

அடுத்த செய்தி