• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உண்ணாவிரதம் இருப்பது உடல் எடையை குறைக்க உதவுமா..? தெரிந்துகொள்ளுங்கள்..

உண்ணாவிரதம் இருப்பது உடல் எடையை குறைக்க உதவுமா..? தெரிந்துகொள்ளுங்கள்..

காட்சிப் படம்

காட்சிப் படம்

ட்ரை பாஸ்டிங் விரத முறை உணவு எடை இழப்புக்கு நன்கு உதவுகிறது. மேலும் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. ஒரு நாள் உலர் உண்ணாவிரதம் இருப்பது 3 நாள் நீர் உண்ணாவிரதம் இருப்பதற்கு சமம் என்று கூறப்படுகிறது.

  • Share this:
உடல் எடை குறைப்பு முயற்சியில் உண்ணா விரதம் இருப்பது என்பது ஒரு பொதுவான நடைமுறையாக இருக்கிறது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களில் உண்ணா நோன்பு எப்போதும் இருந்து வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எடையை இழக்க உதவ கூடிய பயனுள்ள ஒருவழியாக சாப்பிடாமல் விரதம் இருப்பது என்பது மிகவும் பிரபலமாகி புகழ் பெற்றிருக்கிறது. விரத முறைகளில் பல கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

இடைப்பட்ட உண்ணாவிரதம் (Intermittent fasting) என்பது வழக்கமாக சாப்பிடும் நேரத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு உணவை முழுமையாக அல்லது பகுதியாக தவிர்க்க செய்வது. இதை விட மிகவும் பிரபலமாக இருந்து வரும் விரத முறை ட்ரை பாஸ்டிங் என்றழைக்கப்படும் உலர் உண்ணாவிரதம். இதை முழுமையான உண்ணா விரதம் என்றும் குறிப்பிடலாம். இந்த உண்ணாவிரதம் இருக்கும் போது எந்த வடிவத்திலும் உணவு மற்றும் திரவம் ஆகிய இரண்டையும் உட்கொள்ள கூடாது.

மற்ற டயட் பிளான்களில் பொதுவாக தண்ணீர் அருந்த கிடைக்கும் அனுமதி கூட இதில் கிடையாது என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. இந்த ட்ரை பாஸ்டிங் விரத முறை உணவு எடை இழப்புக்கு நன்கு உதவுகிறது. மேலும் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. ஒரு நாள் உலர் உண்ணாவிரதம் இருப்பது 3 நாள் நீர் உண்ணாவிரதம் இருப்பதற்கு சமம் என்று கூறப்படுகிறது. முழு உண்ணாவிரதம் உடலை ஒட்டுமொத்தமாக சுத்திகரிக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.



முழு மற்றும் மற்றும் இடைப்பட்ட விரதத்திற்கு இடையில் இருக்கும் வேறுபாடுகள்:

இடைப்பட்ட உண்ணாவிரதத்தின் (intermittent fasting) போது ஜீரோ கலோரிகளைக் கொண்ட திரவத்தை நீங்கள் எடுத்து கொள்ளலாம். தண்ணீர், நீர்த்த ஏசிவி (diluted ACV), சர்க்கரை இல்லா காபி மற்றும் பால் ஆகியவை இதன் போது சாப்பிடக்கூடிய சில திரவ விருப்பங்களாக இருக்கின்றன. ஆனால் உலர் விரதம் என்றழைக்கப்படும் dry fasting-ன் போது எந்தவொரு உணவுகள் அல்லது திரவத்தையும் சாப்பிடாமல் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இந்த வகை உண்ணாவிரதம் உடலுக்கு சில கூடுதல் ஆரோக்கிய நலன்களை தரும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.



உலர் உண்ணாவிரத வகைகள்:

இடைப்பட்ட விரதம், மாற்று நாள் விரதம், ஈட்-ஸ்டாப்-ஈட் அல்லது பீரியாடிக் விரதம் ஆகியவற்றுடன் இந்த விரதத்தை எளிதாக செய்யலாம். பொதுவாக இந்த விரதம் மென்மை உலர் விரதம் மற்றும் கடின உலர் விரதம் என 2 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

மென்மை உலர் விரதம்: இந்த விரத முறையின் போது பொதுவாக டயட்டில் இருப்பவர்கள் தண்ணீரைப் பயன்படுத்தி பல் துலக்க, குளிக்க மற்றும் முகத்தைக் கழுவ அனுமதிக்கப்படுகிறார்கள்.

கடின உலர் விரதம்: இந்த வகை விரதத்தில், டயட்டில் இருப்பவர்கள் மறந்தும் கூட தண்ணீருடன் தொடர்பு கொள்ள அனுமதியில்லை.



எவ்வாறு செயல்படுகிறது?

தண்ணீரை கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருக்கும் நிலையில், உடலுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. உடலுக்கு தண்ணீர் கிடைக்காத போது அது கொழுப்பை எரித்து தனக்கு தேவையான ஆற்றலை தானே உருவாக்கும் என்று கூறப்படுகிறது. உள்ளுறுப்புகள் தொடர்ந்து இயங்க உடலானது தன்னுள் கிடைக்கக்கூடிய ஒவ்வொரு ஆற்றல் மூலத்தையும் பயன்படுத்த தொடங்குகிறது. மேலும் இந்த வகை விரதம் சேதமடைந்த செல்களை நீக்கி நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், உடலில் புதிய உயிரணுக்களை உருவாக்கவும் உதவுகிறது.

Also Read : உண்ணாவிரதம் இருப்பதனால் உடலுக்கு இத்தனை நன்மைகளா ?

பக்க விளைவுகள்:

நீண்ட நேரம் உண்ணாவிரத நிலையில் இருப்பது சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியாக நீண்ட நேரம் விரதம் இருப்பது அல்லது அடிக்கடி உண்ணாமல் விரதம் இருப்பது சோர்வு, மயக்கம் மற்றும் பலவீன உணர்வை ஏற்படுத்துகிறது. முழு விரதத்தின் போது உணவு மற்றும் தண்ணீர் இரண்டையும் தவிர்ப்பதால், சில நேரங்களில் வழக்கத்தை விட இன்னும் அதிக பசி ஏற்பட்டு இயல்பை விட அதிகமாக சாப்பிட நேரிடலாம். குறிப்பாக கார்போஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்களை எடுக்காமல் கட்டுப்பாடாக இருப்பது தலைவலியை ஏற்படுத்தலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நன்கு ஆரோக்கியமான நபர் இந்த விரத முறையை முயற்சித்து பார்க்கும் முன் நிபுணர்களை கலந்தாலோசித்து முடிவெடுக்கலாம். ஏற்கனவே நோய் பாதிப்பு உள்ளவர்கள், நாட்பட்ட நோயாளிகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் இந்த வகை விரதத்தை முயற்சித்து பார்க்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. உடல் எடை குறைப்பிற்காக நீங்கள் இந்த விரத முறையை முயற்சித்து பார்க்க நின்னாத்தால், மருத்துவர் அல்லது உணவு நிபுணரின் ஆலோசனை பெறுவது நல்லது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: