முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சூப்பரான மட்டன் கட்லெட் எப்படி செய்வது எப்படி? இதோ ரெசிபி!

சூப்பரான மட்டன் கட்லெட் எப்படி செய்வது எப்படி? இதோ ரெசிபி!

மட்டன் கட்லெட்

மட்டன் கட்லெட்

எப்பவும் போல மட்டன் குழம்பு, மட்டன் வறுவல், மட்டம் பிரட்டல் என வைக்காமல் ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க. உங்க வீட்டுல உள்ள எல்லாருக்கும் புடிக்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வீக்கென்ட் என்றாலே அனைவரின் வீட்டிலும் அசைவ வாசனை தூக்கும். ஆனால், அனைவரும் எப்பவும் ஒரே மாதிரியான சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, மட்டன் வறுவல், பொரியல், அவையள் என செய்தவற்றையே செய்வோம். எப்போதாவது, மட்டன் வைத்து வித்தியாசமாக சமைக்க ஆசைப்பட்டால் உங்களுக்கு ஒரு சூப்பரான ரெசிபியை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான ‘மட்டன் கட்லெட்’ வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் செய்வது எப்படி எனஇங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ஆட்டிறைச்சி - 250 கிலோ.

இஞ்சி - பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்.

பச்சை மிளகாய் - 1.

மஞ்சள் - 1/4 ஸ்பூன்.

இலவங்கப்பட்டை பொடி - 1/4 ஸ்பூன்.

வெங்காயம் - 1.

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.

உருளைக்கிழங்கு - 1.

கிராம்பு - 1.

கொத்தமல்லி, புதினா - தலா ஒரு கொத்து.

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

முதலில், எடுத்துக்கொண்ட ஆட்டிறைச்சியை தண்ணீரில் கழுவி நன்கு சுத்தம் செய்து, பின் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

இதை தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீருடன் உருளை கிழங்கு சேர்த்து நன்கு வேக வைத்து, தனியே தோலுரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இதனிடையே எடுத்துக்கொண்ட வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி தயாராக வைத்துக் கொள்ளவும்.

Also Read | இனி வீட்டிலேயே மொறு மொறுனு KFC ஸ்டைல் சிக்கன் செய்யலாம்.. ரெசிபி இதோ...

பின் அகன்ற பாத்திரம் ஒன்றை எடுத்து அதில், நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, மிளகாய் தூள், கிராம்பு, இலவங்கப்பட்டை பொடி, உப்பு, இஞ்சி - பூண்டு விழுது என அனைத்து மசாலா பொருட்களையும் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

இதையடுத்து, ஒரு மிக்ஸி ஜாரில் அவித்த உருளைக்கிழங்கு, ஆட்டிறைச்சி சேர்த்து அரைக்கவும். தொப்பி திப்பியாக அரைத்துக்கொள்வது நல்லது. பின், தயார் செய்து வைத்த மசாலா சேர்மத்துடன் சேர்த்து நன்கு பிசைந்துக்கொள்ள கட்லெட்டிற்கான சேர்மம் ரெடி.

தற்போது கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கட்லெட் சேர்மத்தை வேண்டிய அளவு மற்றும் வடிவத்தில் தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான மட்டன் கட்லெட் ரெடி!.

First published:

Tags: Food items, Food recipes, Mutton, Mutton recipes