முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / புரோட்டீன் முழுமையாக கிடைக்க முட்டையை எப்போதும் இப்படித்தான் சாப்பிட வேண்டுமாம்… ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்..!

புரோட்டீன் முழுமையாக கிடைக்க முட்டையை எப்போதும் இப்படித்தான் சாப்பிட வேண்டுமாம்… ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்..!

உடல் எடை குறைக்க உதவும் : உடல் இயக்கத்திற்கு தேவையான ஆற்றல் முட்டையில் இருந்து கிடைத்து விடுவதால், மாவுச்சத்து உணவுகளை நீங்கள் பெரிதும் குறைத்துக் கொள்ளலாம். மேலும், முட்டை சாப்பிடும்போது வயிறு நிரம்பிய உணர்வு எளிதில் கிடைக்கும். இதனால், மற்ற உணவு அளவுகள் குறையும் என்ற நிலையில், எடையை குறைக்க இது உதவும்.

உடல் எடை குறைக்க உதவும் : உடல் இயக்கத்திற்கு தேவையான ஆற்றல் முட்டையில் இருந்து கிடைத்து விடுவதால், மாவுச்சத்து உணவுகளை நீங்கள் பெரிதும் குறைத்துக் கொள்ளலாம். மேலும், முட்டை சாப்பிடும்போது வயிறு நிரம்பிய உணர்வு எளிதில் கிடைக்கும். இதனால், மற்ற உணவு அளவுகள் குறையும் என்ற நிலையில், எடையை குறைக்க இது உதவும்.

முட்டைகளில் அடங்கி இருக்கும் அதிக புரோட்டின் எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

முட்டை , இன்றியமையாத ஊட்டச்சத்தாக இருக்கும் புரோட்டினின் பவர் ஹவுஸ் (Power house) என்று  அழைக்கப்படுகின்றன. முட்டையில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்கள் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. எனவே நமது அன்றாட உணவில் தவறாமல் முட்டைகளை சேர்த்து கொள்ள ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பல்வேறு தயாரிப்பு முறைகளை பயன்படுத்தி முட்டைகளை உணவில் சேர்த்து கொண்டாலும், எப்படி மற்றும் எவ்வளவு புரதத்தை முட்டைகள் வழங்குகின்றன என்ற அடிப்படையில் முட்டைகளை தயாரிக்கும் விதம் என்பதும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

இதனிடையே பிரபல ஊட்டச்சத்து நிபுணர் என்மாமி அகர்வால் சோஷியல் மீடியாவில் சமீபத்தில் முட்டைகளை உணவில் சேர்த்து கொள்வதற்கான சிறந்த தயாரிப்பு வழியை ஷேர் செய்து உள்ளார். முட்டைகளை "சன்னி சைட் அப்" (sunny side up) முறையில் தயாரிப்பது மிகவும் ஆரோக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் ஷேர் செய்துள்ள போஸ்ட்டில் ஃபன் ஃபேக்ட் (Fun fact) என்று குறிப்பிட்டு, முட்டையில் உள்ள பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் மஞ்சள் கருவில் உள்ளன. எனவே முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கருவை சேர்த்து ஒரு முழு முட்டையாக சாப்பிடுவதால் புரோட்டின், கொழுப்பு மற்றும் கலோரிகளின் சரியான சமநிலை அளவு கிடைக்கும்.

மேலும் முட்டையின் வெள்ளை + மஞ்சள் கரு ஆகிய இரண்டையும் சேர்த்து ஒரு முட்டையாக சாப்பிட்ட பிறகு பெரும்பாலான மக்கள் முழுமையாகவும் திருப்தியாகவும் உணருகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இங்கே சன்னி சைட் அப் என்பது "ஒன்சைட் ஆம்லெட்" ஆகும். முட்டையை உடைத்து அதன் ஒரு பக்கம் மட்டுமே வேக வைக்கும் போது, மஞ்சள் கரு திரவமாகவே இருக்கும். அதே சமயம் ஆம்லெட் மறுபக்கம் புரட்டி போடப்படாமல் அப்படியே எடுத்து பரிமாறப்படும். ஒன்சைட் ஆம்லெட்டின் வெள்ளை வெந்து விட்டதா? என்பதை சரி பார்க்க லேசாக வெண்ணையை ஊற்றி பார்க்கலாம்.

ஒரு முழு முட்டையில் வைட்டமின் ஏ - 6 சதவீதம், வைட்டமின் பி 5 - 7 சதவீதம், வைட்டமின் பி 12 - 9 சதவீதம், பாஸ்பரஸ் - 9 சதவீதம், வைட்டமின் பி 2 - 15 சதவீதம், செலினியம் - 22 சதவீதம் சத்துக்கள் அடங்கியுள்ளது.

இவங்கெல்லாம் சீத்தாப்பழம் சாப்பிடவே கூடாதா? கட்டுக்கதைகளை உடைக்கும் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ..!

முட்டைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்ல கொழுப்பைபின்(HDL) அளவை உயர்த்த உதவுகிறது. இது பக்கவாதம் மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.

* முட்டைகளில் அடங்கி இருக்கும் வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தினசரி முட்டைகளை சாப்பிடுவது ரத்தத்தில் ஜீயாக்சாண்டின் மற்றும் லுடீன் ஆகியவற்றை அதிகரிக்க செய்வதால் கண் சிதைவு மற்றும் கண்புரை அபாயம் குறைகிறது.

* ஒரு முட்டையில் 125.5 மி.கி. கோலின் (choline) உள்ளது. இது இதய ஆரோக்கியத்திற்கும் மூளை ஆரோக்கியத்திற்கும் நன்மை தர கூடியது.

* முட்டைகளில் அடங்கி இருக்கும் அதிக புரோட்டின் எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்கிறது.

First published:

Tags: Boiled egg, Egg, Protein, Protein Diet