முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பழைய சாதம் மீந்துவிட்டதா..? கவலையே வேண்டாம்.. மொறு மொறுனு தோசை சுட்டு சாப்பிடலாம்..

பழைய சாதம் மீந்துவிட்டதா..? கவலையே வேண்டாம்.. மொறு மொறுனு தோசை சுட்டு சாப்பிடலாம்..

தோசை

தோசை

பழைய சாதம் அதிகமாக மீந்து போனால் கொட்டுவதற்கும் மனம் வராது. இனி கவலை வேண்டாம். இப்படி தோசையாக சுட்டு சாப்பிடுங்கள்.

  • Last Updated :

பழைய சாதம் உடலுக்கு குளிர்ச்சி மட்டுமல்லாது பல வகைகளில் நன்மை அளிக்கக் கூடியது. பழைய சாதம் அதிகமாக மீந்து போனால் கொட்டுவதற்கும் மனம் வராது. இனி கவலை வேண்டாம். இப்படி தோசையாக சுட்டு சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள்

பழைய சாதம் - 1 கப்

அரிசி மாவு - 1 கப்

கோதுமை மாவு - 1/4 கப்

ரவை - 2 மேசைக் கரண்டி

தயிர் - 1/4 கப்

உப்பு/ தண்ணீர் - தேவைக்கு ஏற்ப

பேக்கிங் சோடா - 1/4 மேசைக் கரண்டி

எண்ணெய் - தோசை சுடுவதற்கு ஏற்ப

செய்முறை :

மிக்ஸியில் பழைய சாதத்துடன் மற்ற அரிசி மாவு, கோதுமை மாவு, ரவை, உப்பு, பேக்கிங் சோடா, சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

அதில் புளிப்பு சுவைக்கு தயிர் சேர்த்துக் கொள்ளவும்.

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்... உப்பு சீடை ரெசிபி...

பின் தோசை மாவு ஊற்றுவதற்கு ஏற்ப தண்ணீர் கலந்து கொள்ளவும்.

தவாவில் வழக்கம் போல் தோசை சுடுங்கள்.

மொறு மொறு பழைய சாதம் தோசை தயார்.

First published:

Tags: Breakfast, Cooked Rice Benefits, Dosa, Idli dosa batter