ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வெயிலுக்கு குளுகுளுவென இருக்கும் தர்பூசணி ஜூஸ்... இந்த மாதிரி குடிச்சு பாருங்க...

வெயிலுக்கு குளுகுளுவென இருக்கும் தர்பூசணி ஜூஸ்... இந்த மாதிரி குடிச்சு பாருங்க...

தர்பூசணி ஜூஸ் : உடலுக்கு தேவையான நீர்ச்சத்து இந்த ஜூஸில் கிடைக்கும். ஒரு கிளாஸ் தர்பூசணி ஜூஸ் அருந்திய உடனேயே உங்கள் உடலில் புத்துணர்ச்சி கிடைப்பதை உணர முடியும். விட்டமின் ஏ, விட்டமின் சி போன்ற சத்துகள் நிறைந்தது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் இது உதவிகரமாக இருக்கும்.

உடல் வெப்பத்தை தணிப்பதோடு பசியை போக்குகிறது. உடல் எடைக் குறைக்க நினைப்போரும் இதை குடிக்கலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தர்பூசணிப் பழம் 96 சதவீதம் நீர்ச்சத்துக் கொண்டது. அதனால்தான் வெயில் எட்டிப்பார்க்கத் தொடங்கிய அடுத்த நொடி தர்பூசணிகளின் சந்தை லாபம் ஈட்டுகிறது. உடல் வெப்பத்தை தணிப்பதோடு பசியை போக்குகிறது. உடல் எடைக் குறைக்க நினைப்போரும் இதை குடிக்கலாம். வெயில் எரிச்சலால் அவதிப்படும் கர்ப்பிணிகளும் இதை சாப்பிடலாம். சரி எப்படி வித்தியாசமான சுவையில் செய்வது எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தர்பூசணி - ஒரு பவுல்

சர்க்கரை - 2 ஸ்பூன் ( தேவைப்பட்டால் )

எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

புதினா இலைகள் - 3

செய்முறை :

தர்பூசணியை மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள். அதோடு சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறும் பிழிந்து கொள்ளுங்கள்.

மைய அரைத்ததும் சாறை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஐஸ் கட்டிகளை போடுங்கள். அதில் புதினா இலைகளையும் தூவுங்கள். இந்தக் கலவையை 10 நிமிடங்கள் அப்படியே வையுங்கள்.

வெள்ளை சர்க்கரையை பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத 5 உண்மைகள்..!

10 நிமிடங்கள் கழித்து கலக்கிக் குடித்தால் தொண்டைக்கு மட்டுமல்ல உடலுக்கே ஜில்லென இருக்கும்.

குறிப்பு : எலுமிச்சை, புதினா சேர்க்காமல் பாலை நன்குக் காய்ச்சி ஃபிரிட்ஜில் வைத்து ஐஸ் கட்டிகளுக்கு பதில் பாலை ஜூஸில் கலந்து குடித்தால் இன்னும் சுவை கூடும்.

First published:

Tags: Healthy juice, Summer Food, Watermelon