முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / தர்பூசணி பழத்தில் சட்னி கூட அரைக்கலாமா..? செம்ம ருசியா இருக்கும்... செஞ்சு பாருங்க..!

தர்பூசணி பழத்தில் சட்னி கூட அரைக்கலாமா..? செம்ம ருசியா இருக்கும்... செஞ்சு பாருங்க..!

தர்பூசணிப் பழத்தில் சட்னி

தர்பூசணிப் பழத்தில் சட்னி

சுலபமாக தயாரிக்கக்கூடிய இந்த டிஷ் ஒரு சூப்பர் ஆரோக்கியமான உணவாகும்.

  • Last Updated :

கோடை வெயில் வருகிறதோ இல்லையே அதற்கு முன்பே தர்பூசணி சீசன் தொடங்கிவிடும். அப்படி வாங்கும் தர்பூசணியில் வெயிலுக்கு இதமாக ஜூஸ், சாலட் என கூலான முறையில்தான் சாப்பிடுவோம். ஆனால் அதில் சட்னி கூட செய்து சாப்பிடுகிறார்கள் தெரியுமா..? ஆம்.. இது ஒரு வட இந்திய டிஷ் ஆகும். தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் புளி ஆகியவற்றை தர்ப்பூசணியுடன் சேர்த்து அரைத்து சாப்பிடும் சுவையே தனி தான்.

சுலபமாக தயாரிக்கக்கூடிய இந்த டிஷ் ஒரு சூப்பர் ஆரோக்கியமான உணவாகும். இந்த தர்பூசணி சட்னியை பொரியல், நாச்சோஸ், சாண்ட்விச்கள், பர்கர், தோசை, இட்லியுடன் பரிமாறலாம். இதனை எப்படி செய்வது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள் :

தர்பூசணி - 1 கப்

பச்சை மிளகாய் - 3

புளி விழுது

எண்ணெய் - தேவையான அளவு

அரைத்த தேங்காய் - 2 ஸ்பூன்

கிராம்பு - 3

பூண்டு - 5 துண்டு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க

கடுகு - 1 ஸ்பூன்

கருவேப்பிலை - 1 கைப்பிடி

உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்

செய்முறை :

முதலில் ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் தர்பூசணி பழ துண்டுகள், அரைத்த தேங்காய், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் புளி ஆகியவற்றை சேர்க்கவும்.

சுமார் 3 நிமிடங்கள் இவற்றை நன்கு வதக்கவும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு சூடு ஆறியதும் இந்த கலவையை மிக்சியில் நன்கு அரைத்து கொள்ளவும். மற்றொரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உளுந்தம் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

சிக்கன் பாப்கார்ன் மிகவும் பிடிக்குமா..? வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்து சாப்பிட ரெசிபி...

top videos

    இதில் அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி குறைவான தீயில் சற்று கொதிக்க விட்டு இறக்கவும். இதனை உங்களுக்கு விருப்பமான டிஷுடன் பரிமாறலாம். தர்பூசணியில் இனிப்பு பிடிக்காதவர்கள் அதில் இருக்கும் வெள்ளை பகுதியை மட்டும் எடுத்து சட்னி வைத்து சாப்பிடலாம்.

    First published:

    Tags: Chutney, Summer Food, Watermelon