தர்பூசணியில் துவையலா..? கேட்க மட்டுமல்ல சுவையிலும் வித்தியாசம்தான்..லஞ்சுக்கு டிரை பண்ணுங்க..!

தர்பூசணி | watremelon

தர்பூசணி கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். இதேபோல இதய பிரச்னை, மலச்சிக்கல் போன்றவற்றை சரி செய்யவும் உதவுகிறது.

  • Share this:
கோடைகாலங்களில் அதிக வியர்வை காரணமாக உடலில் உள்ள நீர் வெளியேறிவிடும், இதனால் நீங்கள் எப்போதும் நீரேற்றமாக இருப்பது அவசியம். தர்பூசணி பழம் கோடை கால வரப்பிரசாதம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு தர்பூசணியில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் தர்பூசணி பழத்தில் வைட்டமின் சத்துகள் நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். இதேபோல இதய பிரச்னை, மலச்சிக்கல் போன்றவற்றை சரி செய்யவும் தர்பூசணி பழம் உதவுகிறது.

இதனை அப்படியே அல்லது ஜூஸ், சாலட், சட்னி என விதவிதமாக செய்தும் சாப்பிடலாம். தர்பூசணி சட்னி ஒரு வட இந்திய டிஷ் ஆகும். தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் புளி ஆகியவற்றை தர்ப்பூசணியுடன் சேர்த்து அரைத்து சாப்பிடும் சுவையே தனி தான். சுலபமாக தயாரிக்கக்கூடிய இந்த டிஷ் ஒரு சூப்பர் ஆரோக்கியமான உணவாகும். இந்த தர்பூசணி சட்னியை பொரியல், நாச்சோஸ், சாண்ட்விச்கள், பர்கர், தோசை, இட்லியுடன் பரிமாறலாம். இதனை எப்படி செய்வது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

தேவையான பொருட்கள் :

தர்பூசணி - 1 கப்
பச்சை மிளகாய் - 3
புளி விழுது
எண்ணெய் - தேவையான அளவு
அரைத்த தேங்காய் - 2 ஸ்பூன்
கிராம்பு - 3
பூண்டு - 5 துண்டு
உப்பு - தேவையான அளவு

தாளிக்க

கடுகு - 1 ஸ்பூன்
கருவேப்பிலை - 1 கைப்பிடி
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்



செய்முறை :

முதலில் ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் தர்பூசணி பழ துண்டுகள், அரைத்த தேங்காய், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் புளி ஆகியவற்றை சேர்க்கவும்.

தொப்பை கொழுப்பைக் குறைக்கும் சுரைக்காய் ஜூஸ்..! வெயில் காலத்தில் நல்லா ஒர்க்அவுட் ஆகும்..டிரை பண்ணி பாருங்க..!

சுமார் 3 நிமிடங்கள் இவற்றை நன்கு வதக்கவும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு சூடு ஆறியதும் இந்த கலவையை மிக்சியில் நன்கு அரைத்து கொள்ளவும். மற்றொரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உளுந்தம் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

இதில் அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி குறைவான தீயில் சற்று கொதிக்க விட்டு இறக்கவும். இதனை உங்களுக்கு விருப்பமான டிஷுடன் பரிமாறலாம். தர்பூசணியில் இனிப்பு பிடிக்காதவர்கள் அதில் இருக்கும் வெள்ளை பகுதியை மட்டும் எடுத்து சட்னி வைத்து சாப்பிடலாம்.

குறிப்பு : தர்பூசணிப் பழத்தின் காம்பு காய்ந்திருந்தால், அந்தப் பழம் பழுத்து விட்டது என்று அர்த்தம். காம்பு பச்சையாக இருந்தால் முழுமையாகப் பழுப்பதற்கு முன்னரே பறிக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம். இந்த வகை பழத்தை தவிர்த்துவிடுவது நல்லது.

 
Published by:Sivaranjani E
First published: