உலகின் மிகப்பெரிய சிக்கன் எக் ரோல் - வைரலாகும் வீடியோ!

உலகின் மிகப்பெரிய சிக்கன் எக் ரோல்

‘இந்தியா ஈட் மேனியா’ இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், காரியாவில் அமைந்துள்ள செஃப் அல்லாடின் என்ற கடையில் இந்த பிரமாண்டமான ரோல் தயாரிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இன்ஸ்டாகிராமில் ‘இந்தியா ஈட் மேனியா’ பக்கத்தில் காரியாவில் அமைந்துள்ள செஃப் அலாடின் என்ற கடையில் உலகின் மிகப்பெரிய சிக்கன் எக் ரோல் தயாரிக்கப்படும் வீடியோ ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

கொல்கத்தாவில் உள்ள ஒரு தெரு கடை பல்வேறு விதமான உணவு வகைகளுக்கு பெயர் போனது. இந்த நிலையில் தற்போது அங்கு 'உலகின் மிகப்பெரிய சிக்கன் முட்டை ரோல்' தயார் செய்துள்ளனர். ‘இந்தியா ஈட் மேனியா’ இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், காரியாவில் அமைந்துள்ள செஃப் அல்லாடின் என்ற கடையில் இந்த பிரமாண்டமான ரோல் தயாரிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்த வீடியோவையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதில் 4 சப்பாத்தி மாவு போன்ற வட்ட வடிவிலான மாவை ஒன்று சேர்க்கும் வகையில் வீடியோ தொடங்குகிறது.

அதாவது நான்கையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து எண்ணெய் ஊற்றி அதனை மிக பெரிய வட்ட வடிவில் தேய்க்கிறார். அதை வேகவைத்து ரோல் தயாரிக்கப்பட்டதும் அதில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றுகிறார், பின்னர் அதில் கேரட், முட்டைக்கோஸ், பச்சை பட்டாணி, கொத்தமல்லி ஆகிய காய்கறிகளை பொடிப்பொடியாக வெட்டி மேலே தூவுகிறார்.

இப்போது அந்த ரோல் முழுவதும் காய்கறிகளால் நிரப்பப்பட்டிருப்பது தெரிகிறது. இறுதி கட்டமாக, சிக்கன் கபாப், மட்டன் கபாப், பன்னீர் டிக்கா, சோயாபீன்ஸ் , சிக்கன் ஷமி கபாப் மற்றும் மட்டன் ஷமி கபாப் ஆகியவற்றை சேர்க்கிறார் பின்னர் அழகுபடுத்துவதற்காக வெங்காயம், துருவிய வேகவைத்த முட்டை, சீஸ், மசாலா, பச்சை மிளகாய் சாஸ், மயோனைஸ் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார். வீடியோவைப் பார்ப்போம். 
View this post on Instagram

 

A post shared by India Eat Mania (@india_eat_mania)

இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், சுமார் 26 அங்குல மாபெரும் ரோலை உருவாக்கிய நபரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இதுவரை இந்த வீடியோவவை 2,67, 592 பேர் பார்வையிட்டுள்ளனர் மற்றும் எண்ணற்ற பாராட்டு கமெண்ட்ஸ்களையும் பெற்றுள்ளது. இந்த ராட்சத சிக்கன் எக் ரோல் ரூ .349க்கு கிடைக்கிறது.

Also read... சமீபகாலமாக ட்ரெண்டாகும் பட்டர் காபி... நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

orld’s மிகப்பெரிய சிக்கன் எக் ரோல் ரூ. 349 / - கொல்கத்தாவின் செஃப் அலாதினில் மட்டுமே என்றும் அதன் முகவரியையும் வீடியோவில் குறிப்பிட்டுள்ளனர்.

முகவர் - பஸ் ஸ்டாண்ட், 45,
காரியா ஸ்டேஷன் சாலை,
சோட்டோ போட் தலா,
ஏ / பி, காரியா,
கொல்கத்தா,
மேற்கு வங்கம் 700084.

இந்த வீடியோவை பார்த்த பலரும் பார்ப்பதற்கே அழகாக இருப்பதாகவும், இவ்வளவு பெரிய ரோலா? யம்மி என்றும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். மேலும் ஏராளாமானோர் இந்த வீடியோவை தொடர்ந்து ஷேர் செய்த வண்ணம் உள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: