பலரும் விரும்பி சாப்பிடும் காரசாரமான பூண்டு-வெங்காய சட்னியை ட்ரை செய்துள்ளீர்களா..?

பலரும் விரும்பி சாப்பிடும் காரசாரமான பூண்டு-வெங்காய சட்னியை ட்ரை செய்துள்ளீர்களா..?

சட்னி

ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது. கோடை காலத்தில், இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு ஒரு வெங்காயத்தை சாப்பிட்டால், வெயிலின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

  • Share this:
நோய்கள் பரவும் இந்தக் காலகட்டத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான அதே நேரத்தில் சுவையான வெங்காயம்-பூண்டு சட்னியை சாப்பிடுவது நிச்சயம் பலனளிக்கும். ஒருமுறை இந்த சட்னியை செய்து சாப்பிட்டுவிட்டால் நிச்சயம் பலமுறை செய்யத் தூண்டும். இந்த சட்னியில் பூண்டோடு சிறிய வெங்காயம் சேர்த்துச் செய்யும்போது சுவை மேலும் அதிகரிக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் பலரும் இந்த சட்னியை விரும்பி மீண்டும் மீண்டும் கேட்பார்கள். சரி வாருங்கள் இந்த சுவையான சூப்பரான வெங்காயம்-பூண்டு சட்னியை எப்படி செய்வது என்பதை இப்போது காண்போம் வாருங்கள்...

தேவையான பொருள்கள்:

நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
உலர்ந்த சிவப்பு மிளகாய் – 4
கறிவேப்பிலை – 1 கொத்து
பூண்டு – 2 பெரியது
சிறிய வெங்காயம் – 15
புளி விழுது – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1/4 டீஸ்பூன்
வெல்லம் (விருப்பத்திற்கேற்ப) – ஒரு சிட்டிகை



செய்முறை

* பூண்டு மற்றும் சிறிய வெங்காயத்தைத் தோலுரித்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். சட்னிக்கு நல்ல நறுமணத்தை நல்லெண்ணெய் கொடுக்கும்.

* எண்ணெய் சூடானதும் உளுத்தம் பருப்பு மற்றும் உலர்ந்த சிவப்பு மிளகாய் சேர்க்கவும். காஷ்மீரி மிளகாய் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கொடுக்கும்.

* மிளகாய் வறுத்து உப்பிய பிறகு, எண்ணெய்யிலிருந்து எடுத்து ஒதுக்கி வைக்கவும்.

* பிறகு உளுத்தம்பருப்பு சேர்த்து அது பழுப்பு நிறமாக மாறும் வரை வறுத்த பிறகு, பூண்டு மற்றும் சிறிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.

* ஒரு பிடி கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்க்கவும்.

* பூண்டு மற்றும் வெங்காயம் நன்கு வதங்கும் வரை வறுத்துக்கொள்ளவும்.

வறுத்த வெங்காயம் பூண்டு கலவையோடு எடுத்து வைத்த மிளகாய், புளி, உப்பு மற்றும் ஒரு சிட்டிகை வெல்லம் சேர்த்து மிக்சியில் அரைத்தால், சுவையான பூண்டு சட்னி தயார்.

பூண்டின் ஆரோக்கிய நன்மைகள்:

பூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது. சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. குறிப்பாக பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆய்வுகளில் பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக்காக செயல்படுவதாக தெரிய வந்துள்ளது.

வெங்காயத்தின் ஆரோக்கிய நன்மைகள்:

கோடை காலத்தில், இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு ஒரு வெங்காயத்தை சாப்பிட்டால், வெயிலின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது உடல் உஷ்னத்தை குறைக்கும். வெங்காயம் இரத்த சுத்திகரிப்பாளராகக் கருதப்படுகிறது, மேலும் இது கெட்ட இரத்தத்தை அழித்து உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. இதில் உள்ள பாஸ்பரஸ் அமிலம் இரத்தத்தை சுத்தம் செய்கிறது. இந்த காரணத்திற்காக, ஒவ்வொரு இரவும் தூங்குவதற்கு முன் ஒரு வெங்காயத்தை சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். இதைச் செய்வதன் மூலம், உங்கள் இரத்தம் சுத்தமாக இருக்கும், மேலும் முகத்தில் கொதிப்பு, பரு போன்ற பிரச்சினைகள் எதுவும் இருக்காது.

 
Published by:Sivaranjani E
First published: