அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு இளைப்பாறும் மாலை வேலையில் ஒரு கையில் தேநீர் கோப்பையும், மற்றொரு கையில் சுட, சுட சமோசாவும் இருந்தால் அன்றைய பொழுதே அசத்தலாக இருக்கும் இல்லையா?. என்ன தான் பஜ்ஜி, போண்டா, வடை, மிக்சர் என மாலை நேர ஸ்நாக்ஸாக பல பலகாரங்களை சாப்பிட்டாலும், சமோசாவிற்கு இருக்கும் மவுசே தனியானது. இந்தியாவில் மிகவும் பிரபலமான சிற்றுண்டிகளில் ஒன்றாக உள்ளது. இதை மாலையில் தேநீருடன் மட்டுமல்ல காலை உணவாக கூட எடுத்துக்கொள்ள பலரும் தயாராக உள்ளனர். வெங்காயம், உருளைக்கிழக்கு, பன்னீர், காளான், வெஜிடபுள், மேஜி நூடுல்ஸ் என பலவகையிலும் சமோசாக்கள் விற்பனையாகின்றன.
வீட்டிலேயே சுவையாக மிருதுவான சமோசாவைச் செய்ய விரும்பினால், நீங்கள் செய்ய வேண்டியது சில விஷயங்கள் மட்டுமே. எவ்வளவு செலவு செய்தாலும் கடைகளில் கிடைப்பது போல் மிருதுவான, மொறு மொறுப்பான சமோசா கிடைக்கவில்லை என குறைபட்டுக்கொள்ளாதீர்கள். இதற்கு காரணம் சமோசாவிற்கான மாவை சரியாக பிசையாது தான். அதேபோல் நல்ல ஸ்டஃபிங் இல்லை என்றாலும் சமோசாவின் சுவை கெட்டுவிடும். சரி வாருங்கள், கடைகளில் கிடைப்பதை விட சுவையான, மொறு மொறுப்பான சமோசாவை வீட்டிலேயே எப்படி தயார் செய்வது என பார்க்கலாம்...
மிருதுவான மாவை பெற...
மைதா – 3 கப்
எண்ணெய் – 7 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 1 கப்
செய்முறை:
சமோசா செய்ய ஒன்றரை கிண்ணம் மைதா மாவை எடுத்துக் கொண்டால், 6 முதல் 7 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். முதலில் மைதா மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு தேவைக்கு ஏற்ப நெய் அல்லது எண்ணெய் சேர்க்கவும். அதனுடன் சிறிது உப்பு சேர்த்து அனைத்தையும் நன்கு கலக்கவும். எண்ணெய் அல்லது நெய்யை கலந்ததும் மாவு நன்றாக இணைந்து பிசைய வந்தால், மிருதுவான சமோசா கிடைக்கும். உப்பு, எண்ணெய்யை கலந்த பிறகு சிறிது, சிறிதாக தண்ணீரை கலந்து மாவை பிசையவும். நன்றாக மாவு திரண்ட பிறகு, ஈரத்துணியால் மூடி சிறிது நேரம் விடவும். உங்கள் சமோசா மாவு தயார்.
பார்லி அல்லது கினோவா... எடை குறைப்புக்கு எது சிறந்தது..? ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்
மொறு, மொறு சமோசாவை பெற தவிர்க்க வேண்டியவை:
1. மாவில் எண்ணெய் அல்லது நெய்யைக் கலந்ததும் உடனே பிசைய ஆரம்பிக்காதீர்கள், சிறிது நேரம் கழித்து மாவை பிசைய ஆரம்பிக்கவும்.
2. மாவில் அனைத்து தண்ணீரையும் ஒரே நேரத்தில் சேர்க்க கூடாது.
3. மாவு மிகவும் கடினமாகவோ அல்லது மிகவும் மென்மையாகவோ இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
4. பிசைந்த பிறகு, ஈரமான காட்டன் துணியால் மூடி 10 நிமிடங்கள் வைக்கவும்.
5. சமோசாவிற்காக மாவை உருட்ட வேண்டிய நேரம் வரும் வரை அதனை ஈரத்துணியால் மூடி வைக்கவும்.
6. மாவில் எண்ணெய்யை நன்றாகச் சேர்க்கவும், ஏனெனில் அது சமோசாவை மிருதுவாக மாற்றும்.
7. ஸ்டஃபிங்கிற்கு உருளைக்கிழங்கைத் துருவுவதற்குப் பதிலாக, மசாலாப் பொருட்களுடன் கலக்கவும். நன்கு கலந்த பிறகு, சமோசா மாவிற்குள் வைத்து நிரப்பவும்.
8. சமோசாவை ஸ்டஃப் செய்த பின் சரியாக மூட மைதா மாவைப் சிறிதளவு பசை போல் தண்ணீர் விட்டு கலக்கி பயன்படுத்தலாம்.
9. மைதா மாவுடன் சிறிதளவு ரவையைச் சேர்ப்பதால் அதன் தன்மை மேம்படும், சுவையும் அதிகரிக்கும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.