செல்ஃபி முகம் பதித்து காஃபி பிரியர்களை ஈர்க்கும் புதுமுயற்சி!

காஃபி அல்லது ஷேக் வகைகள் எதுவானாலும் அதை பரிமாறுவதில் புதுமையான கற்பனை உத்திகளைக் கையாளுகின்றனர்.

செல்ஃபி முகம் பதித்து காஃபி பிரியர்களை ஈர்க்கும் புதுமுயற்சி!
செல்ஃபி காஃபி (Image: Your story)
  • News18
  • Last Updated: January 21, 2019, 12:24 PM IST
  • Share this:
மும்பையில் உள்ள செல்ஃபிசினோ நிறுவனம் வாடிக்கையாளர்களின் முகம் பொறித்த காஃபியை அளித்து ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. காஃபி பிரியர்களை ஈர்க்கும் இந்த காஃபி கான்செப்ட் இந்தியாவில் முதல் முறையாகும்.

நீங்கள் காஃபி அருந்த நினைத்தால் உங்களுக்குப் பிடித்த புகைப்படத்தை அவர்களின் அலுவலக வெப்சைட்டிற்குச் ஷேர் செய்ய வேண்டும். பின் அவர்கள் அதை ஃபிரிண்டிங் சாஃப்ட்வேரில் ஷேர் செய்கின்றனர்.

மற்றொரு பக்கத்தில் நீங்கள் விரும்பிய காஃபி பிளேவரை தயாரிக்கின்றனர். காஃபி ரெடியானதும், அந்த பிரிண்ட் செய்யப்பட்ட புகைப்படமும் தயாராகி காஃபியின் மேற்புறத்தில் உங்கள் முகத்தை பதிக்கின்றனர். பின் உங்கள் முகம் பொறித்த காஃபி உங்களுடையதாகிறது.


இதேபோல் திக்க்ஷேக் ட்ரிங்குகளிலும் முகம் பதித்து பரிமாறப்படுகிறது. இந்த முயற்சி உலகிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு மற்றொரு ஸ்பெஷல் என்னவெனில் முகம் மட்டுமன்றி நீங்கள் ஏதேனும் சோர்வுடன் இருந்தால் அதை அவர்களிடம் தெரியப்படுத்தினால் போதும். உடனே உங்களை மன ஆறுதல் படுத்தும் வார்த்தைகளை காஃபில் பொறித்து செர்வ் செய்வார்கள்.

உண்மையிலேயே அது உங்களை உற்ச்சாகப்படுத்துவதாக இருக்கும். கூடுதலாக ப்ரோட்டீன்கள் நிரைந்த மில்க்‌ஷேக்ஸ், திக்‌ஷேக்ஸ், ஃப்ரீக் ஷேக்ஸ் ட்ரிங்குகளும் இங்கு கிடைக்கின்றன. இங்கு காஃபி அல்லது ஷேக் வகைகள் எதுவானாலும் அதை பரிமாறுவதிலும் புதுமைகளை கற்பனை உத்திகளைக் கையாளுகின்றனர்.அதைப் பார்த்ததுமே வாடிக்கையாளர்களுக்கு உற்சாகத்தை அளிப்பதாக இருக்கிறது. கடையின் இண்ட்டீரியர் அமைப்பும் வாடிக்கையாளர்களுக்கு புது அனுபவத்தை அளிக்கிறது. சுற்றி செங்கற்கல் அமைப்புடன் சுவர்களில் இயற்கையான புற்கள் பதிக்கப்பட்டு முற்றிலும் கார்டன் தீம் செட் அப்பில் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறது.

தங்கள் காதலை புதுவிதமாக ப்ரப்போஸ் செய்யவும், திருமண நாள், பிறந்த நாள், காதல் முதல் ஆண்டு என எந்த முக்கிய நாளிற்கும் உங்கள் துணை அல்லது நண்பர்களை இங்கு அழைத்துச் சென்று ஆச்சரியத்தில் ஆழ்த்தலாம். குறிப்பாக காஃபி பிரியர்கள் கட்டாயம் இந்த செல்ஃபிசினோவை ஒரு முறை விசிட் செய்து வாருங்கள். புது அனுபவமாக இருக்கும்.

Also See..

First published: January 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்