ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தக்காளி என்னும் சூப்பர் ஃபுட்... உங்களுக்கே தெரியாத நன்மைகள்..!

தக்காளி என்னும் சூப்பர் ஃபுட்... உங்களுக்கே தெரியாத நன்மைகள்..!

தக்காளி

தக்காளி

தக்காளியில் அமிலத்தன்மை ,பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதை நீங்கள் உணவாக உட்கொள்ளலாம் அல்லது சருமத்தில் அப்ளை செய்யும் போது இதில் உள்ள சத்துக்கள் உங்களுக்கு சரும பொலிவைத் தருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒவ்வொரு வீட்டு சமையல் அறையிலும் தக்காளிக்கென்று தனி இடம் உண்டு. தக்காளி இல்லாமல் சமையல் நிச்சயம் நிறைவு பெறாது. எந்த காய்கறிகள் வீட்டில் இல்லையென்றாலும் ஒரு தக்காளி மற்றும் வெங்காயம் இருந்தாலும் ஒரு நேர உணவை முடித்துவிடலாம். இவ்வாறு சமையலில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தக்காளியில் பல்வேறு மருத்துவக்குணங்களும் அடங்கியுள்ளது. இதில் உள்ள பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் ஈ, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரமும் தக்காளியில் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணையாக உள்ளது.

குறிப்பாக நீரழிவு நோய் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்ப்பது முதல் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்போரும் தக்காளியை உங்களது அன்றாட உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டுகின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

மேலும் தக்காளியில் உள்ள லைகோபீன் என்ற பொருள் பிரகாசமான சருமத்தைப் பெற உதவியாக உள்ளது. எப்படி? வேறு என்ன உடல் பிரச்சனைகளுக்குத் தக்காளி தீர்வு காண்கிறது என்று அறிந்துக் கொள்வதற்கு முன்னதாக தக்காளியில் உள்ள சத்துக்கள் என்னென்ன? என்பது குறித்து அறிந்துக் கொள்வோம். தக்காளியில் கலோரிகள் 22.5 கிராம், கார்போஹைட்ரேட்டுகள்: 4.86 கிராம், கொழுப்பு: 0.25 கிராம், புரதம்: 1.1 கிராம், வைட்டமின் சி: 17.1 மி.கி, பொட்டாசியம்: 296 மி.கி, வைட்டமின் கே: 9.88 எம்.சி.ஜி, ஃபோலேட்: 18.8 எம்.சி.ஜி, நீர்ச்சத்து 95 சதவீதம் உள்ளது.

உடலில் பல நோய்களுக்கு மருந்தாக அமையும் தக்காளி:

இரத்த அழுத்தம் – இன்றைக்கு உயர் இரத்த அழுத்தம் என்பது பொதுவாக பலரும் சந்திக்கும் உடல் நலப்பிரச்சனைகளில் ஒன்றாகி விட்டது. தக்காளி இப்பிரச்சனைத் தீர்ப்பதற்கு சிறந்த மருந்தாக உள்ளது. குறிப்பாக தக்காளியில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், சிறுநீரகங்கள் வழியாக கூடுதல் அளவுகளை அகற்றுவதன் மூலம் உடலில் உள்ள சோடியத்தின் அளவைக்குறைக்க உதவியாக உள்ளது.

இதய நோய் – தக்காளியில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் கோலின் ஆகியவை உள்ளதால் இதயம் சீராக இயங்குவதற்கு உதவியாக உள்ளது.

நீரழிவு பிரச்சனைக்குத் தீர்வு– சமீபத்திய ஆய்வுகளின் படி டைப் 1 நீரழிவு நோயளிகளுக்குத் தக்காளி மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி, பொட்டாசியம், லைக்கோபென்னெ என்ற ஆக்ஸிடன்ட் இருப்பதால் நமது செல்கள் தன்னைத் தானே சரி செய்து கொள்ள உதவுகிறது. மேலும் உடலில் இன்சுலின் அளவை சீராக்குவதற்குத் தக்காளி மிகுந்த உதவியாக உள்ளது.

மலச்சிக்கலுக்குத் தீர்வு – தக்காளியில் உள்ள நீர் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது. நீங்கள் உங்களது உணவில் தக்காளியை சேர்த்துக்கொள்ளும் போது மலச்சிக்கல் பிரச்சனைக்குத் தீர்வு காண முடிகிறது. தக்காளி சாப்பிடுவதன் மூலம் செரிமானம் மற்றும் குடல் இயக்கம் மேம்படும்.

சரும பராமரிப்பு – தக்காளியில் அமிலத்தன்மை ,பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதை நீங்கள் உணவாக உட்கொள்ளலாம் அல்லது சருமத்தில் அப்ளை செய்யும் போது இதில் உள்ள சத்துக்கள் உங்களுக்கு சரும பொலிவைத் தருகிறது. மேலும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதையும் தடுக்கிறது. மேலும் தக்காளியில் உள்ள வைட்டமின் சி ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது மற்றும் தோல், எலும்புகள் மற்றும் இணைப்பு திசுக்களுக்கு முக்கியமானதாகவும் உள்ளது.

Also Read : சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட தக்காளியை இப்படி எல்லாம் கூட பயன்படுத்தலாமா!

இதுப்போன்று பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தக்காளி கொண்டிருந்தாலும், சில உடல் நலப்பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். குறிப்பாக இரைப்பைக் குடல் பிரச்சனை உள்ளவர்கள், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் பச்சைத் தக்காளி அல்லது தக்காளி விதைகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இவற்றின் அமிலத்தன்மைக் காரணமாக இதுப்போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு நெஞ்செரிச்சல் மற்றும் செரிமான அமைப்பின் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Skincare, Tomato, Weight loss