நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆரஞ்சு மற்றும் கொத்தமல்லி ஜூஸ்.. எளிமையாக செய்யலாம்!

கொத்தமல்லி இலையில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தசோகை வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. ஆரஞ்சு பழம் உடலின் எலும்பு வளர்ச்சி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆரஞ்சு மற்றும் கொத்தமல்லி ஜூஸ்.. எளிமையாக செய்யலாம்!
ஆரஞ்சு மற்றும் கொத்தமல்லி ஜூஸ்
  • Share this:
நாம் நீண்ட காலமாக நம் ஆரோக்கியத்தை கவனிக்காமல் விட்டுள்ளோம், இதற்கு 2020ம் ஆண்டு பல வழிகளில் நமக்கு பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது. இனியும் ஆரோக்கியத்தை கடைபிடிக்காமல் இருந்தால் நிலைமை மோசமாகிவிடும். கொரோனா போன்ற தொற்றுநோய்களின் அபாயத்தைத் தடுக்க நம் உணவில் இருந்து நம் வாழ்க்கை முறை வரை அனைத்தையும் மாற்ற வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி என்பது ஒரு நாளில் வருவதில்லை.

ஆனால் தொடர் முயற்சிகளால், பல நோய்களுக்கு எதிராக, குறிப்பாக பருவகால நோய்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும்.

இப்போதெல்லாம் பலர் சளி, இருமல், காய்ச்சலுக்கு மருத்துவரிடம் செல்கின்றனர். இவற்றிக்கு பதிலாக நம் உணவில் கவனம் செலுத்தினால் போதும். வைட்டமின் C, ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றி, நம் தோல், முடி மற்றும் நகங்களுக்கு மிகவும் முக்கியமான வைட்டமின் என்று அறியப்படுகிறது. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும் ஆபத்தான தீவிர செயல்பாட்டை எதிர்த்துப் போராட நமக்கு உதவுகிறது.


நம்மைச் சுற்றி பல பழங்கள் மற்றும் மூலிகைகள் உள்ளன, அவை வைட்டமின் C நிரப்பப்பட்டவை. பெரும்பாலான சிட்ரஸ் பழங்கள் மற்றும் கீரைகள் ஆக்ஸிஜனேற்றங்களால் செறிவூட்டப்படுகின்றன. ஆரஞ்சு பழச்சாறு வைட்டமின் சி-ன் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாக இருப்பதை நாம் அறியவேண்டும். கடையில் வாங்கும் ஆரஞ்சு ஜூஸ் உங்களுக்கு சாதகத்தை விட பாதகத்தை ஏற்படுத்தும் என்பதால் நீங்கள் வீட்டில் புதிய ஆரஞ்சு சாற்றை தயாரிக்கலாம்.ஆரஞ்சு பழத்தில் உள்ள நன்மைகள் :ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் இருக்கின்றன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும் சிறுநீரிலும் வெளியேறும்.

இதனால் சருமம் பளபளப்புடன் நோயின் தாக்குதலின்றியும் இருக்கும்.  ஆரோக்கியமான விந்தணுகள் உருவாக ஆண்களுக்கு ஆரஞ்சு பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். இது மிகவும் சிறந்த பழம் ஏனெனில் இந்த பழத்தில் உள்ள ஃபோலேட் என்னும் ஊட்டச்சத்தானது, விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்று மருத்துவ ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான தோல் பராமரிப்பிற்கு தேங்காய் மற்றும் மஞ்சள்.. எப்படி பயன்படுத்தவேண்டும் தெரியுமா..?

ஆரஞ்சு சாற்றை குடிக்கும் பொரும்பாலான குழந்தைகள் அந்த சாற்றை விரும்புகின்றனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 4 முதல் 6 அவுன்ஸ் 100% பழச்சாறும் மற்றும் 7 முதல் 18 வயதுக்கு 8-12 அவுன்ஸ் பழச்சாறும் கொடுக்கலாம் என அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் பரிந்துரைக்கிறது.

ஆரஞ்சு ஜூஸ் செய்முறை :

தேவையானவை:

ஆரஞ்சு -2
தேன்- தேவையான அளவு

செய்முறை :

முதலில் ஆரஞ்சு பழத்தை கழுவி அதன் தோலை உரித்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் உள்ள கொட்டைகளை நீக்கிவிட்டு மிக்சியில் நன்றாக அடித்து கொள்ளவேண்டும். ஆரஞ்சு பழத்தில் குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு ஜூஸ் போட வேண்டும். அதோடு தேவையான அளவு தேனை கலந்து குடித்தால் உடல் எடை குறையும்.கொத்தமல்லியில் உள்ள நன்மைகள் :

கொத்தமல்லி இலையில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தசோகை வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. உடலின் ஆற்றலை அதிகரிக்க, எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு, உறுப்புபுக்களின் இயல்பான இயக்கத்துக்கு என்று பெரிதும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள், பற்கள் உறுதி அடையும்.

கொத்தமல்லி இலையை தினமும் அளவோடு உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது.அது நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். இது நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் தாவரம். வாயு பிரச்சனையை குணமாக்கும்.கொத்தமல்லி ஜூஸ் செய்முறை :

கொத்தமல்லியை நீரில் நன்கு கழுவி, சிறிதாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் அதனைப் போட்டு, நீர் ஊற்றி அடுப்பில் வைத்து, 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்த பின் வடிகட்டி சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிக்கவேண்டும்.ஆரஞ்சு மற்றும் கொத்தமல்லி ஜூஸ் செய்முறை :

தேவையான பொருட்கள்:

ஆரஞ்சு பழம் - 2
கொத்தமல்லி கட்டு - 2
கேரட் - 1
எலுமிச்சை சாறு - ஸ்பூன்

செய்முறை :

1. ஒரு ஜூஸரை எடுத்து, கேரட், ஆரஞ்சு, எலுமிச்சை சாறு, கொத்தமல்லி மற்றும் சிறிது தண்ணீர் (தேவைப்பட்டால்) சேர்த்து, எல்லாவற்றையும் சேர்த்து ஒரு கலவையை உருவாக்குங்கள்.

2. சாற்றை வடிகட்டி, பரிமாறவும். இதில் கூடுதல் சர்க்கரை சேர்க்க வேண்டாம். கேரட், இந்த சாறுக்கு ஒரு தனித்துவமான இனிப்பை சேர்க்க உதவுகிறது, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு சிட்ரஸ் நன்மையை பூர்த்தி செய்கிறது. இதனை இதனை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டுமின்றி சருமம் பளபளப்பாகும்.
First published: November 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading