கொரோனா நேரத்தில் ஆரோக்கியமாக இருக்க இதைத்தான் சாப்பிடுகிறேன் : விராட் கோலி வெளியிட்ட லாக்டவுன் ஃபுட் லிஸ்ட்

விராட் கோலி டயட்

அவருடைய போஸ்டுகள் , இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்கள் சமூகவலைதளங்களில் அதிகமாக கவனிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தன் ஃபாலோவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதாகக் கூறியிருந்தார்.

 • Share this:
  விராட் கோலி லாக்டவுன் சமயத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்த ஆக்டிவாக இயங்கி வருகிறார். அவருடைய போஸ்டுகள் , இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்கள் சமூகவலைதளங்களில் அதிகமாக கவனிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தன் ஃபாலோவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதாகக் கூறியிருந்தார்.

  அப்படி ஒரு ரசிகர் உங்களுடைய ஃபுட் ஹாபிட் எந்த மாதிரியான வகையைக் கொண்டிருக்கும். அதன் ரகசியத்தை சொல்ல முடியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு விராட் கோலி அளித்த பதில்தான் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  அதாவது தற்போதைய லாக்டவுன் சமயத்தில் ஆரோக்கியமாக இருக்க நிறைய காய்கறிகள் சாப்பிடுகிறென், முட்டை , 2 கப் காஃபி, பருப்பு வகைகள், சிறு தானிய வகைகள், தினை வகைகள், கீரைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுகிறேன். குறிப்பாக தோசை எனக்கு மிகவும் பிடிக்கும். குவாரண்டின் சமயம் என்பதால் சில கட்டுப்பாடுகளுடன் உணவை சாப்பிட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார்.  தினசரி உணவு வகை எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு எளிமையான முறையில் சமைக்கப்பட்ட இந்திய வகை உணவுகளை அதிக்ம் சாப்பிடுவேன். சில நேரங்களில் சைனீஸும் சாப்பிடுவேன். பாதாம், புரோட்டீன் பார், பழங்கள் நிறைய சாப்பிடுவேன் என்று கூறியுள்ளார்.  முருங்கை இலையில் இருக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா..? இதை படித்தால் வாரம் ஒரு முறையாவது சாப்பிடுவீங்க..!

  இறுதியாக நீங்கள் கூகுள் செய்த விஷயம் என்ன என்ற கேள்விக்கு போர்த்துகீசிய கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இடமாற்றம் செய்தி என்று பதில் அளித்துள்ளார்.

   

   
  Published by:Sivaranjani E
  First published: