• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • விநாயகருக்கு பிடித்தமான பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?

விநாயகருக்கு பிடித்தமான பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?

பிடி கொழுக்கட்டை

பிடி கொழுக்கட்டை

விநாயகர் சதுர்த்தி என்றாலே விதவிதமான கொழுக்கட்டை தான் ஸ்பெஷல். இன்று இனிப்பு பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

  • Share this:
    விநாயகர் சதுர்த்தி அன்று பிடி கொழுக்கட்டை படையலுக்கு வைப்பது வழக்கம். எனவே அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - 1 கப்

    வெல்லம் - 3/4 கப்

    தண்ணீர் - 2 கப்

    தேங்காய் - 1 கப்

    ஏலக்காய் பொடி - 2 ஸ்பூன்

    நெய் - 1 ஸ்பூன்

    மேலும் படிக்க... சூப்பரான ஈஸியான ஈவினிங் ஸ்நாக்ஸ்.. இதோ ரெசிபி..

    பிடி கொழுக்கட்டை


    செய்முறை :

    முதலில் வெல்லத்தை தண்ணீர் ஊற்றி உருக்கிக் கொள்ளுங்கள். பின் அதை வடிகட்டி மீண்டும் கடாயில் ஊற்றி 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். பின் தேங்காயை சேர்த்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு அரிசி மாவை கலந்து கட்டிகளின்றி கலந்துகொள்ளுங்கள். தண்ணீர் இறுகி கெட்டிப் பதத்தில் மாவு வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

    இப்போது மாவை சற்று காற்றாட விட்டு கைகளால் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து நீள வாக்கில் பிடித்து பிடித்து வையுங்கள். பின்னர் அதனை இட்லி குக்கர் தட்டில் வைத்து வேக வையுங்கள். 15 நிமிடங்கள் போதும் வெந்துவிடும். இப்போது சுவையான பிடி கொழுக்கட்டை ரெடி

    மேலும் படிக்க... கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்... தட்டு வடை ரெசிபி....

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: