முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கிராமத்து ஸ்டைல் அரைத்துவிட்ட தக்காளி ரசம்.. இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்கள்...

கிராமத்து ஸ்டைல் அரைத்துவிட்ட தக்காளி ரசம்.. இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்கள்...

ரசம்

ரசம்

Rasam | சளி, இருமல் போன்ற பிரச்சினைகளை தீர்க்கும் ரசத்தை வறுத்து அரைத்து இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். வேறு எந்த குழம்பையும் கேட்கவே மாட்டார்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரசம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். காரணம் இந்த ரசம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை செய்யக் கூடியதாக இருக்கிறது. இந்த பாட்டி ஸ்டைல் ரசத்தை சூப் போல சூப்பராக இப்படி செய்து கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்பார்கள்? 

தேவையான பொருட்கள்

புளி – எலுமிச்சை அளவு,

பழுத்த தக்காளி – மூன்று,

கடுகு – கால் டீஸ்பூன்

மிளகு – ஒரு டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

தனியா – அரை டீஸ்பூன்

துவரம் பருப்பு – ஒரு டீஸ்பூன்

வர மிளகாய் – 2

பச்சை மிளகாய் – ஒன்று

கருவேப்பிலை – 2 கொத்து

மல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவிற்கு

பூண்டு – 10 பல்

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன்

எலுமிச்சைச்சாறு – அரை மூடி

உப்பு தேவையான அளவிற்கு

தக்காளி

செய்முறை

1. முதலில் வறுக்க தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் துவரம் பருப்பு, வர மிளகாய் ஒன்று, சீரகம், தனியா, மிளகு ஆகியவற்றை சேர்த்து லேசாக சூடு ஏற வறுத்தால் போதும்.

2. அதிகம் வறுத்து விட்டால் ரசம் வாசனை மாறிவிடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் கறிவேப்பிலை ஒரு கொத்து சேர்த்து லேசாக வறுத்து அடுப்பை அணைத்து ஆற விட வேண்டும்.

3. இந்த வறுத்த பொருட்களுடன் பச்சை மிளகாய் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் தக்காளி பழங்களை நன்கு கைகளால் சாறு இறங்க பிசைந்து கொள்ளுங்கள்.

4.பின்னர் அதனுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்த விழுதை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.

5. பின்னர் அடுப்பில் வைத்து நுரை பொங்கி வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும். அப்போது கொத்தமல்லி இலையை போட்டு தாளிக்க வேண்டும். இப்போது தக்காளி ரசம் ரெடி..

First published:

Tags: Rasam rice