கிராமத்து ஸ்டைலில் பரங்கிக்காய் சட்னி ரெசிபி...

பரங்கிக்காய்

கிராமங்களில் பித்தம் போக பரங்கிக்காயைதான் உண்ணுவார்கள். இது நன்றாக பசியை தூண்டும். மூல நோய், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்..

  • Share this:
பரங்கிக்காய் குளிர்ச்சியானதாக இருப்பதால் இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும். கிராமங்களில் பித்தம் போக இதைதான் உண்ணுவார்கள். இது நன்றாக பசியை தூண்டும். மூல நோய், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும். அந்த வகையில் கிராமத்து ஸ்டைலில் பரங்கிக்காய் சட்னி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க...

தேவையான பொருட்கள்:

பரங்கிக்காய் - ஒரு துண்டு

காய்ந்த மிளகாய் - 4

உளுந்து - கால் கப்

சீரகம் - ஒரு தேக்கரண்டி

பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி

புளி - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

மேலும் படிக்க... சூப்பரான ஈஸியான ஈவினிங் ஸ்நாக்ஸ்.. இதோ ரெசிபி..

பரங்கிக்காய்


செய்முறை: 

முதலில் பரங்கிக்காயின் தோலை நன்கு சீவி எடுத்து அலசி விட்டு நறுக்கிக் கொள்ளவும். பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து, காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் நறுக்கின பரங்கிக்காய் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். கடைசியாக புளி, பெருங்காயம் சேர்த்து லேசாக வதக்கி ஆற வைக்கவும்.

பின்னர் உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து, மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். இப்போது சுவையான பரங்கிக்காய் சட்னி ரெடி.. இதனை இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா ஆகியவற்றிற்கு தொட்டு கொண்டால் நன்றாக இருக்கும். பரங்கிகாயை அதிகம் வதக்கினால் அதில் இருக்கும் தாது சத்துக்கள் அழியும் அதனால் அதனை லேசாக வதக்கினால் போதும்.

மேலும் படிக்க... கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்... தட்டு வடை ரெசிபி...
Published by:Vaijayanthi S
First published: