மொத்தமாவே 5 நிமிஷம் போதுமாம்... விஜய் டிவி பிரியங்கா வீட்டு ஸ்வீட் சப்பாத்தி!

விஜய் டிவி பிரியங்கா

இதை அடிக்கடி வீட்டில் பிரியங்கா செய்து சாப்பிடுவாராம்.

 • Share this:
  விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரியங்கா வீட்டு ஸ்வீட் சப்பாத்தி செய்ய மொத்தமாவே 5 நிமிஷம் போதுமாம். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

  சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதுமே மக்களுக்கு ஃபேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் .அந்த லிஸ்டில் முதலில் இருப்பவர் சூப்பர் சிங்கர் பிரியங்கா தான். எவ்வளவு கலாய்த்தாலும் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், காமெடியாகவே நிகழ்ச்சியைக் கொண்டு செல்வது தான் விஜய் டிவி பிரியங்காவின் ஸ்டைல். டிடி-க்கு பிறகு தமிழ்நாட்டில் நம்ம விஜய் டிவி பிரியங்கா தான் என்ற பேச்சுகளையும் சோஷியல் மீடியாவில் அடிக்கடி பார்க்கலாம்.விஜய் டிவி தொகுப்பாளர்கள் சிலர், திரையுலகிலும் கலக்கி வந்தாலும், இவர் மட்டும் இன்னும் திரைப்பட நிழல் படாமலேயே உள்ளார்.

  அதுவும் நல்லதுக்கு தான். இவரும் சினிமா பக்கம் போயிட்டா விஜய் டிவி ரசிகர்கள் கண்டிப்பாக பிரியங்காவை மிஸ் செய்வார்கள். அதிலும் குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவை ரசிக்காதவர்களே இல்லை எனலாம்.போட்டியாளர்கள், நடுவர்கள், பார்வையாளர்கள் உட்பட அனைவரும் சரமாரியாக கலாய்க்கும் ஒரே ஆங்கர் நம்ம பிரியங்கா தான். பிரவீனை திருமணம் செய்து கொண்ட பின்பு தனது கெரியரை தொடரும் பிரியங்கா போன வருட லாக்டவுனில் தனியாக யூடியூப் சேனலைத் தொடங்கினார். இன்று அந்த சேனல் 1.3 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கடந்து பயணித்து கொண்டிருக்கிறது. அதில் அவ்வப்போது மேக்கப், குக்கிங்க், டிராவல், ஷூட்டிங், ஷாப்பிங் வீடியோக்களை பகிர்ந்து கொள்வார் பிரியங்கா.

  அந்த வகையில் சமீபத்தில் அவரும் அவரின் அம்மாவும் செய்த ஸ்வீட் சப்பாத்தி வீடியோ படும் வைரலானது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் பிரியங்காவின் அம்மா செய்த இந்த சப்பாத்தியை செய்ய மொத்தமாவே 5 நிமிஷம் போதும்.  வழக்கமாக கோதுமை மாவை சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதை பக்குவமாக வட்ட வடிவில் சப்பாத்தில் போல் தட்டி நடுவில் ஒரு ஸ்பூன் சர்க்கரையை வைத்து பூரணம் போல் மடித்து மீண்டும் சப்பாத்தி கல்லில் வட்டமாக தட்டி சுட்டு எடுத்தால் போதும். டேஸ்டியான ஸ்வீட் சப்பாத்தி ரெடி. சர்க்கரை சூட்டில் உருகில் சப்பாத்தியுடன் சாப்பிடும் போது நல்ல டேஸ்டை தரும் என்பதால் இதை அடிக்கடி வீட்டில் பிரியங்கா செய்து சாப்பிடுவாராம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சர்க்கரை மட்டுமில்லை, விருப்பத்திற்கு ஏற்ப சப்பாத்தில் மாவில் தேங்காய், வெல்லம், வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக, நாட்டுச் சர்க்கரை, அதனோடு முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை உள்ளிட்ட நட்ஸ் வகைகளை அரைத்துப் பொடி செய்தும் சப்பாத்தில் சுட்டு எடுக்கலாம் என கூடுதல் டிப்ஸையும் பிரியங்காவின் அம்மா வழங்கியுள்ளார். நீங்களும் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: