Home /News /lifestyle /

டெசர்ட் வகைகளை விரும்பி சாப்பிடுவீங்களா..? அப்போ இந்த சேமியா கஸ்டர்ட் உங்களுக்கு பிடிக்கும்...

டெசர்ட் வகைகளை விரும்பி சாப்பிடுவீங்களா..? அப்போ இந்த சேமியா கஸ்டர்ட் உங்களுக்கு பிடிக்கும்...

சேமியா கஸ்டர்ட்

சேமியா கஸ்டர்ட்

இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டில் விருந்தாளிகள் வந்தாலும் சட்டென இந்த வித்தியாசமான ஸ்வீட் சேமியா கஸ்டட் செய்து தரலாம்.

திருமணம், பார்ட்டி என எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் டெசர்ட் வகைகளை சாப்பிடுவதற்கென சிலர் இருப்பார்கள். ஹோட்டல் சென்றால் கூட டெசர்ட் வகைகளைதான் ஆர்டர் செய்வார்கள். அவர்களுக்காகவே இந்த அசத்தல் சேமியா கஸ்டர்ட். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டில் விருந்தாளிகள் வந்தாலும் சட்டென இந்த வித்தியாசமான ஸ்வீட் சேமியா கஸ்டட் செய்து தரலாம்.

தேவையான பொருட்கள் :

சேமியா - 1/2 கப்
நெய் - 1/2 tsp
சர்க்கரை - 1/4 கப்
பால் - 4 கப்
கஸ்டட் - 2 tbsp
திராட்சை, மாதுளை, ஆப்பிள் - விருப்பமான பழ வகைகள்
சப்ஜா விதைகள் - 2 tsp



செய்முறை :

கடாய் வைத்து நெய் விட்டு சேமியாவை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளுங்கள்.

பின் பாத்திரத்தில் பாலை ஊற்று காய்ச்சுங்கள். நன்கு கொதித்ததும் வறுத்த சேமியாவை சேர்த்து கலக்குங்கள்.

பின் சர்க்கரை சேர்த்துக் கலந்து 7 நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள்.

கொதித்து கொஞ்சம் கெட்டிப் பதத்தில் இருக்கும்போது கஸ்டடை அரை கப் பாலில் கலந்து கொதிக்கும் சேமியாவில் ஊற்றி கலக்குங்கள். மீண்டும் 5 நிமிடங்களுக்குக் கொதிக்கட்டும்.

ராகியில் ஓட்டைவடை செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா..? ருசியானது மட்டுமல்ல ஆரோக்கியமானது...

பின் அதை நன்கு ஆற வைத்து ஃபிரிட்ஜில் 2 மணி நேரம் வையுங்கள்.

2 மணி நேரம் கழித்து வெளியே எடுத்து ஒரு கண்ணாடி கிளாசில் சப்ஜாவை முதலில் போடுங்கள் அடுத்ததாக சேமியாவை 2 கரண்டி ஊற்றி அதன் மேல் மாதுளை தூவுங்கள்.

மீண்டும் அதன் மேல் சேமியா ஊற்றி பிடித்த பழ வகைகள் சேர்க்கலாம். பின் அதன் மேல் கொஞ்சம் சேமியா தூவி நட்ஸ் வகைகள் சேர்த்து பருகலாம்.

அவ்வளவுதான் சுவையான சேமியா கஸ்டட் தயார்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Desert Recipes

அடுத்த செய்தி