Home » News » Lifestyle » FOOD VEPPAM POO RASAM RECIPE IN TAMIL SKV

பாரம்பரிய மகத்துவம் கொண்ட 'வேப்பம்பூ ரசம்'... எப்படி செய்வது?

பாரம்பரிய மகத்துவம் கொண்ட 'வேப்பம்பூ ரசம்'... எப்படி செய்வது?
பாரம்பரிய மகத்துவம் கொண்ட 'வேப்பம்பூ ரசம்'... எப்படி செய்வது?
  • Share this:
வேப்பம்பூ ரசம் செய்து அனைவரும் சாப்பிடலாம். கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை வேப்பம்பூ கட்டுப்படுத்தும். அதில் ரசம் வைப்பது எப்படி என்பது குறித்து காணலாம்

செய்யத் தேவையானவை



  • வேப்பம்பூ – 15 கிராம் சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளுங்கள்

  • புளி – எலுமிச்சை தேவையான அளவு எடுத்துக்கொள்ளுங்கள்

  • வெந்தயம் - 1 டீஸ்பூன்
  • தக்காளி - 2

  • பெருங்காயம் - கொஞ்சம்

  • துவரம் பருப்பு - ஒன்றரை தேக்கரண்டி

  • கொத்தமல்லி , கருவேப்பிலை - தேவைக்கேற்ப கொஞ்சம்

  • உப்பு - தேவையான அளவு

  • மிளகாய் வற்றல் – 2

  • எண்ணெய் – ஒரு டீஸ்பூன்


செய்முறை

  • 2 டம்ளர் தண்ணீரில் புளியை கரைத்து அதில் தக்காளிப் பழங்களை போட்டு நன்கு பிசைய வேண்டும்.

  • வெந்தயம், துவரம் பருப்பு, இரண்டையும் லேசாக வறுத்துப் பொடி செய்து புளித்தண்ணீரில் போட்டு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

  • நன்கு கொதித்து வரும் போது கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய் வற்றல் போட்டு கடுகு பொரிந்ததும் காயம், கறிவேப்பிலை, போட்டுத் தாளித்து கொட்டவும்.

  • பின்பு வேப்பம்பூவை எண்ணெயில் வறுத்து கொதிக்கும் ரசத்தில் கொட்டி ரசத்தை கீழே இறக்கி வையுங்கள்.

  • அதனுடன் கொத்தமல்லி தழையை கிள்ளி சேர்த்து மூடி வைக்கவும்.


அவ்வளவு தான் வேப்பம்பூ ரசம் ரெடி...!
First published: September 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading