Home /News /lifestyle /

வழக்கமா செய்வதை விடுங்க.. இந்த பொங்கலுக்கு செஃப் வெங்கடேஷ் பட் ஸ்பெஷல் சர்க்கரை பொங்கல் ட்ரை பண்ணுங்க!

வழக்கமா செய்வதை விடுங்க.. இந்த பொங்கலுக்கு செஃப் வெங்கடேஷ் பட் ஸ்பெஷல் சர்க்கரை பொங்கல் ட்ரை பண்ணுங்க!

சர்க்கரை பொங்கல்

சர்க்கரை பொங்கல்

பாரம்பரிய முறையில் சர்க்கரை பொங்கல் செய்வது தான் நம் வீடுகளில் உள்ள வழக்கம்.

    பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டது. மற்ற எந்த பண்டிகையும் தமிழர்களால் தொடர்ந்து 4 நாட்களுக்கு கொண்டாடப்படுவதில்லை. ஆனால் பொங்கல் பண்டிகை தமிழ் நாட்டில் தமிழர்களால் கொண்டாடப்படும் ஸ்பெஷலான பண்டிகை. விவாயிகளுக்கு, சூரிய ம்பகவானுக்கு, ஆடு மாடு போன்ற கால்நடைகளுக்கு நன்றி சொல்வது என பாரம்பரிய முறையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை பல ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    புத்தாடை அணிந்து, வாசலில் பொங்கல் வைத்து, கரும்பு உடைத்து மொத்த குடும்பமும் சூரிய பகவானுக்கு நன்றி கூறி பொங்கல் பண்டிகையை கொண்டாடுவார்கள். அதிலும் பொங்கல் பண்டிகையில் எல்லோர் வீட்டிலும் சர்க்கரை பொங்கல் கட்டாயம் செய்யப்படும். இனிப்புடன் எல்லா இன்பமும் கிடைக்க வேண்டும் என்பது தான் அதன் அர்த்தம். சரி விஷயத்திற்கு வருவோம். பாரம்பரிய முறையில் சர்க்கரை பொங்கல் செய்வது தான் நம் வீடுகளில் உள்ள வழக்கம். ஆனால் இந்த முறை ஒரு சேஞ்சுக்கு வித்யாசமான முறையில் சர்க்கரை பொங்கல் செய்து பாருங்கள். டேஸ்டுக்கு எந்த குறையும் வராது என்கிறார் செஃப் வெங்கடேஷ் பட்.

    இதையும் படிங்க.. பொங்கல் திருநாளை ஆரோக்கியமான முறையில் வழிபட சிறுதானிய பொங்கல் ரெசிபி...

    செஃப் வெங்கடேஷ் பட்டின் யூடியூப் சேனலில் தான் இந்த சர்க்கரை பொங்கல் ரெசிபி வெளியிட்டப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கட்டாயம் இதை பொங்கல் அன்று ட்ரை பண்னி பாருங்கள். பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி டேஸ்டுக்கு சில பொருட்களை சேர்க்கிறார் அவ்வளவு தான்.

    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி, பாசிப்பருப்பு, நெய், பால், முந்திரி, லவங்கம், திராட்சை, வெல்லம், நட் மெக் பவுடர், ஏலக்காய்.

    செய்முறை:

    1. முதலில் குக்கரில் தேவையான அளவு கழுவிய பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து அதில், 1 கப் காய்ச்சாத பால், நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    இதையும் படிங்க.. ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் அக்காரவடிசல் செய்ய தெரியுமா..? ரெசிபி இதோ...

    2. பின்பு அதில் 4 கப் தண்ணீர் உற்றி வேக வைக்க வேண்டும்.

    3. இப்போது, தனியாக கடாயில் 1 கப் தண்ணீர் ஊற்றி அதில் 1 கப் வெல்லம் சேர்த்து நன்கு கரைத்து கொள்ள வேண்டும். அந்த வெல்லக்கரைசலை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.



    4, பின்பு நெய் ஊற்றி அதில் முந்திரி, திராட்சை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்து அதை அப்படியே பொங்கல் கலவையில் சேர்க்க வேண்டும். இத்துடன் வெல்லக்கரைசலையும் சேர்க்க வேண்டும்.

    5. கடைசியாக டேஸ்டுக்கு நட் மக் பவுடரையும் சேர்க்க வேண்டும். இப்போது பொங்கல் பதம் பர்த்து நெய் சேர்த்து இறக்கினால் சுடச்சுட சர்க்கரை பொங்கல் தயார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Food recipes, Pongal, Pongal recipes

    அடுத்த செய்தி