Home /News /lifestyle /

தக்காளி விலை குறையும் வரை செஃப் வெங்கடேஷ் பட்டின் இந்த வெங்காய சட்னி டிரை பண்ணுங்க

தக்காளி விலை குறையும் வரை செஃப் வெங்கடேஷ் பட்டின் இந்த வெங்காய சட்னி டிரை பண்ணுங்க

வெங்காய சட்னி

வெங்காய சட்னி

வெங்கடேஷ் பட்டின் இந்த வெங்காயச் சட்னியை டிரை பண்ணுங்க.. பின் அடிக்கடி இந்த சட்னி தான் செய்வீர்கள்.

தக்காளி விலை அதிகரித்திருக்கும் நிலையில் பலரும் காரசார சட்னி வகை இல்லாமல் தவிக்கின்றனர். இதற்கு சிறந்த வழியாக வெங்கடேஷ் பட்டின் இந்த வெங்காயச் சட்னியை டிரை பண்ணுங்க.. பின் அடிக்கடி இந்த சட்னி தான் செய்வீர்கள்.

தேவையான பொருட்கள் :

வெங்காயம் - 2
தேங்காய் - 4 பத்தை
கஷ்மீர் மிளகாய் - 5
வெல்லம் - 30 - 40 கிராம்
புளி - சிறிதளவு
உப்பு - சிறிதளவு

தாளிக்க :

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு



செய்முறை :

ஜாரில் நறுக்கிய வெங்காயம், தேங்காய் , மிளகாய் , வெல்லம், புளி மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

பின் அதை ஒரு கிண்ணத்தில் வழித்து எடுத்துக்கொள்ளுங்கள்.

சமையலறையில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய 7 மசாலாக்களின் மருத்துவ குணங்களை பற்றி தெரியுமா..?

இறுதியாக தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றுங்கள். அவ்வளவுதான் வெங்காய சட்னி தயார். இது இட்லி , தோசைக்கு பொருத்தமாக இருக்கும்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Chutney, Onion, Tomato

அடுத்த செய்தி