வெங்காய வடகம்...வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது?

Easy recipes |

வெங்காய வடகம்...வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது?
வெங்காய வடகம்...வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது?
 • News18 Tamil
 • Last Updated: September 15, 2020, 2:47 PM IST
 • Share this:
வெயில் காலத்தில் எளிதாக வீட்டிலேயே சின்ன வெங்காயத்தை வைத்து வடகம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

இதற்கு தேவைப்படும் பொருள்கள் • அரிசி மாவு - 4 கப்

 • சின்ன வெங்காயம் - 4 கப்

 • உப்பு - ருசிக்கு
 • எலுமிச்சம் பழம் - 1 டீஸ்பூன்

 • பச்சை மிளகாய் - 4செய்முறை :

 • தண்ணீரை கொதிக்க வைத்துக் கொண்டு அரிசிமாவில் கொஞ்சம் தண்ணீரை விட்டு நன்கு கரைத்து கொதிக்கும் நீரில் ஊற்றி கட்டி தட்டாதபடி கரைத்து விடவும்.

 • பச்சை மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொதித்து கொண்டிருக்கும் அரிசி மாவு கூழுடன் கலந்து நன்கு கிளறுங்கள்.

 • பின்னர் பொடியாய் நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து மீண்டும் கிளறுங்கள்.

 • பின்னர் கொதிக்கும் கூழை கீழே இறக்கி வைத்து விட்டு எலுமிச்சை பழத்தை பிழிந்து கிளறி விடுங்கள். இதனை சிறு உருண்டைகளாக உருட்டி உங்கள் வீட்டு மொட்டை மாடி அல்லது வெயில் இருக்கும் இடத்தில் வைத்து வெயிலில் நன்கு காயவைத்து எடுத்து விடுங்கள்.

 • ஒரு கண்ணாடி குவளையில் போட்டுவைத்துக்கொள்ளுங்கள். தேவை படும் பொழுது பொரித்து சாப்பிடலாம். நன்றாக இருக்கும். உங்கள் தேவைக்கு ஏற்ப வெங்காயத்தை வைத்து செய்து கொள்ளலாம் . வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டில் இருந்தே சம்பாதிக்க விரும்புவோர் இதனை செய்து கடைகளுக்கு விற்பனை செய்தும் பணம் சம்பாதிக்கலாம்.

First published: September 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading