Home /News /lifestyle /

வேற லெவல் டேஸ்டில் வெங்காய வடை.. பக்குவமாய் செய்வது எப்படின்னு பாருங்க!

வேற லெவல் டேஸ்டில் வெங்காய வடை.. பக்குவமாய் செய்வது எப்படின்னு பாருங்க!

வெங்காய வடை

வெங்காய வடை

குழந்தைகளுக்கு எதாவது ஸ்நாக்ஸ் செய்து தர வேண்டும் என உங்களுக்கு தோன்றினால் கட்டாயம் இந்த வெங்காய வடை ரெசிபியை ட்ரை செய்யுங்கள்.

    ஸ்நாக்ஸ் என்ற வார்த்தையை கேட்டாலே போதும் குழந்தைகள் 1 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தாலும் வந்து விடுவார்கள். அந்த அளவுக்கு குழந்தைகளை ஸ்நாக்ஸ் வகைகள் கட்டிப்போட்டு வைத்துள்ளது. எண்ணெய்யில் பொரித்த சிப்ஸ், பக்கோடா, உப்பு காரம் அதிகம் இருக்கும் சமோசா, கட்லட், சிக்கன் , பன்னீர் என வெரைட்டியாக வரும் சீஸ் ரோல்ஸ் போன்றவற்றை இந்த கால குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். இதில் ஆரோக்கியம் இருக்குமா என்றால் அது கேள்விக்குறி தான். ஆனால் 90ஸ் கிட்ஸ்களை கேட்டால் எங்கள் வீட்டில் ஸ்நாக்ஸ் கேட்டால் அம்மாக்கள் சூடா வடை,போண்டா, பஜ்ஜி தான் போட்டு தருவார்கள் என்கிறார்கள். அது உண்மை தான்.

    விடுமுறை நாட்களில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் சுட சுட டீ காபியுடன் வடை, பஜ்ஜி, போண்டா போன்ற உணவுகள் கட்டாயம் இடம் பெறும். அதை கடையில் கூட வாங்க மாட்டார்கள். சட்னி உட்பட வீட்டிலே அரைத்து பரிமாறுவார்கள். ஆனால் இப்போது நேரமின்னை, வேலை பளு காரணமாக பெரும்பாலும் ஸ்நாக்ஸ் என்றால் பக்கத்தில் இருக்கும் கடைக்கும் போய் சமோசா, பாப் பஜ்ஜி, பானி பூரி, சென்னா மசாலா இதுப்போன்ற உணவுகளை வாங்கி வந்து குழந்தைகளிடம் கொடுத்து விடுகிறார்கள். இந்த உணவு பழக்கம் ஆபத்தானது என்பதே பல ஆய்வுகளின் முடிவாக இருக்கிறது. முடிந்த வரை எண்ணெய்யில் பொரிக்கும் உணவுகளை வீட்டிலே செய்து சாப்பிட முயற்சி செய்யுங்கள். ஏனென்றால் ஹோட்டலில் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் குழந்தைகளுக்கு ஜீரண சக்தியை எளிதில் கொடுப்பதில்லை.

    பழுத்து போன வாழைப்பழத்தை வைத்து இப்படியொரு ஸ்வீட்.. நீங்களும் தெரிஞ்சு வச்சிக்கோங்க!

    ஒருவேளை இந்த பதிவை படித்த பின்பு உடனடியாக குழந்தைகளுக்கு எதாவது ஸ்நாக்ஸ் செய்து தர வேண்டும் என உங்களுக்கு தோன்றினால் கட்டாயம் இந்த வெங்காய வடை ரெசிபியை ட்ரை செய்யுங்கள். டேஸ்டில் எந்த குறையும் இருக்காது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ரெசிபியை வழங்கி இருப்பவர் ஆர்த்தி. இவர் தனது yummy tummy என்ற யூடியூப் சேனலில் இந்த ரெசிபி வீடியோவை வெளியிட்டுள்ளார்.



    1. முதலில் அகலமான பாத்திரத்தில் நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    சைவ பிரியரா நீங்கள்? ஒமேகா-3 சத்துக்களை பெற சாப்பிட வேண்டிய உணவுகள்!

    2. பின்பு அதில் உப்பு, கடலை மாவு, மைதா மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் பிசைந்து கொள்ள வேண்டும்.

    3. இப்போது அந்த கலவையை வடை போல் தட்டி காய்ந்த எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் சூப்பரான டேஸ்டியான வெங்காய வடை தயார்.

    நிச்சயமாக குழந்தைகளுக்கு பிடித்த, டீ டைமிங்குக்கு ஏற்ற ஸ்நாக்ஸாக இது இருக்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Evening Snacks, Food recipes, Snacks

    அடுத்த செய்தி