ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

டீயுடன் சூடா வெங்காய பக்கோடா சாப்பிட்டால் எப்படி இருக்கும்..? உடனே செய்ய ரெசிபி...

டீயுடன் சூடா வெங்காய பக்கோடா சாப்பிட்டால் எப்படி இருக்கும்..? உடனே செய்ய ரெசிபி...

வெங்காய பக்கோடா

வெங்காய பக்கோடா

வெங்காய பக்கோடாவும் டீ யும் அட்டகாசமான காமினேஷன்னு எல்லாருக்குமே தெரியும். அப்படி ஒரு அசத்தலான வெங்காய பக்கோடா எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பொதுவா சமையல்னு வந்துட்டாலே வெங்காயம் தவிர்க்க முடியாத பொருளா இருக்கும். சைவம் அசைவம் இரண்டிலுமே வெங்காயம் கொடுக்குற சுவை தனித்துவமா தான் இருக்கும். முட்டை, தோசை, குழம்பு, கிரேவி,வறுவல், பொறியல் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். இது அத்துனையுடய சுவையையும் தூக்கி நிறுத்துறது வெங்காயம் தான்.

  அப்படி இருக்குறப்போ மெயின் பொருளே வெங்காயமா இருந்தா சொல்லவா வேணும். வெங்காய பக்கோடாவும் டீ யும் அட்டகாசமான காமினேஷன்னு எல்லாருக்குமே தெரியும். அப்படி ஒரு அசத்தலான வெங்காய பக்கோடா எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.

  தேவையான பொருட்கள்

  • இரண்டு கப் மெல்லியதாக நறுக்கிய வெங்காயம்
  • ஒரு கப் கடலை மாவு
  • அரை அரிசி மாவு
  • கால் கப் பொட்டுக்கடலை கடலை மாவு
  • ஒரு சிட்டிகை சோடா உப்பு
  • ஒரு ஸ்பூன் நெய்
  • 2 மிளகய் தூள் பொடியாய் நறுக்கியது
  • அரை ஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட்
  • தேவையான அளவு (சோம்பு,உப்பு, பெருங்காயம்,மிளகாய் தூள்)

  செய்முறை

  முதலில் நீட்டமாக நறுக்கிய வெங்காயத்துடன் உப்பு சேர்த்து நன்றாக நொறுங்கும் அளவு பிசைந்துக்கொள்ளவும். இதன் மூலம் வெங்காய பக்கோடா மொறு மொறுவென இருக்கும்.

  பின்னர் ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதனுடன் சோடா உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளாவும் பின்னர் மேலே உள்ள பொருட்களை அதனுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும். மாவின் தன்மை பிடித்தால் கொழுக்கட்டை போலவும் விட்டால் உதிர்ந்து விழும் தன்மையாகவும் இருக்க வேண்டும்.

  Also Read : மழையை ரசிக்க சூடா ஒரு கப் காஃபியுடன் சுட சுட கடலை மாவு போண்டா சாப்பிட்ட எப்படி இருக்கும்..? ரெசிபி இதோ...

  இறுதியாக ஏற்கனவே பிசைந்து வைத்துள்ள வெங்காயத்தையும் இந்த கலவையுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும். வெங்காயத்தில் சாறு இருப்பதனால் தண்ணீர் சேர்க்க தேவையில்லை.பிசைந்த மாவின் பதம் கையால் உதிர்த்து விடும் பக்குவத்தில் இருக்க வேண்டும்.

  வானெலியில் எண்ணெய் காய்ந்ததும் பக்கோடா மாவினை எடுத்து கையால் உதிர்த்து எண்ணெய்க்குள் போட வேண்டும். மொறு மொறுவென வெந்தவுடன் பக்கோடாவை வெளியே எடுத்து விடவும்.

  பார்த்தாலே சாப்பிடத்தோன்றும் வெங்காய பக்கோடா ரெடி. கண்டிப்பா செஞ்சி சாப்பிட்டு ஜாலியா இருங்க..

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Evening Snacks, Food, Onion pakora, Snacks