Home /News /lifestyle /

இப்படியொரு வெங்காய சட்னி செய்தால் வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க!

இப்படியொரு வெங்காய சட்னி செய்தால் வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க!

வெங்காய சட்னி

வெங்காய சட்னி

சின்ன வெங்காயத்தில் செய்யும் வெங்காய சட்னியை பற்றி தெரிந்து கொள்வோம்.

    மார்னிங் டிபன், இரவு டின்னர் என நம் வீடுகளில் பெரும்பாலும் தோசை, இட்லிக்கு என்ன சட்னி அரைப்பது என்ற குழப்பம் இருந்துக் கொண்டே இருக்கும். சாம்பார் இருந்தால் கூட சட்னி வேண்டும் என்பார்கள். கார சட்னி, பூண்டு சட்னி, தேங்காய் சட்னி,புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் இன்று வெங்காய சட்னி எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள். பெரும்பாலான வீடுகளில் வெங்காய சட்னி பெரிய வெங்காயத்தில் தான் செய்வர்கள். ஆனால் இந்த பதிவில் சின்ன மாற்றமாக சின்ன வெங்காயத்தில் செய்யும் வெங்காய சட்னியை பற்றி தெரிந்து கொள்வோம்.

    இந்த சின்ன வெங்காய சட்னி ரெசிபி வீடியோ ’அபூர்வாஸ் நளபகம்’ என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்ப்ட்டுள்ளது. இந்த சேனலில் வெளியிடப்படும் குக்கிங் ரெசிபி வீடியோக்கள் பலரையும் கவர்ந்துள்ளது. சரி இப்போது தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.

    இட்லி, தோசைக்கு ஏற்ற தக்காளி சாம்பார்.. இன்னிக்கே வீட்ல ட்ரை பண்ணுங்க!

    தேவையான பொருட்கள்:

    சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், புளி, உப்பு, கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை.

    செய்முறை:

    1. முதலில் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் 7 அல்லது 8 காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    2. பின்பு அதே கடாயில் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    கல்யாண வீட்டு வத்தக்குழம்பு.. இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்!

    3. வதக்கும் போதே சிறிதளவு புளி சேர்த்து அதன் நிறம் மாறும்வரை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    4. இப்போது மிக்சியில் வறுத்த காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    5. பின்பு அதனுடன் வறுத்து வைத்துள்ள சின்ன வெங்காயம் புளி சேர்த்து சட்னி போல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.



    6. கடைசியாக எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டி இறக்கினால் போதும், சூப்பரான  வெங்காய சட்னி ரெடி.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Breakfast, Chutney, Food recipes

    அடுத்த செய்தி