மண மணக்கும் வெண்டைக்காய் மோர் குழம்பு...

vஎண்டைக்காய் மோர் குழம்பு | vendaikkai more kuzhambu

சகல நோய்களையும் தீர்க்கும் மருத்துவக் குணம் அதில் உள்ளது.

 • Share this:
  வெண்டைக்காயில் சர்க்கரை, அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு, வயிற்றுப் புண், பார்வைக் குறைபாடு என சகல நோய்களையும் தீர்க்கும் மருத்துவக் குணம் அதில் உள்ளது. அதில் பொரியல், சாம்பார், வறுவல் என செய்திருப்பீர்கள்... மோர் குழம்பு வைத்துள்ளீர்களா? இதோ ரெசிபி ...

  தேவையான பொருட்கள் :

  வெண்டைக்காய் - 13,

  ஓரளவு புளிப்பு உள்ள மோர் - 500 மில்லி,

  காய்ந்த மிளகாய் - 2,

  தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப்,

  மிளகு, தனியா, கடலைப்பருப்பு, கடுகு, வெந்தயம் - தலா ஒரு தேக்கரண்டி,

  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

  வெண்டைக்காய்


  மேலும் படிக்க...  உடல் எடையை குறைக்கும் சுரைக்காய் தயிர் பச்சடி ரெசிபி...

  செய்முறை:

  வெண்டைக்காயை நீள துண்டுகளாக நறுக்கி, எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், மிளகு, தனியா, கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்து, மோருடன் கலந்து தேவையான உப்பு சேர்க்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து, மோர் கலவையை ஊற்றி, வதக்கிய வெண்டைக்காயும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும். இப்போது சூப்பரான வெண்டைக்காய் மோர்க்குழம்பு ரெடி.

  மேலும் படிக்க... செட்டிநாடு பால் பணியாரம் எப்படி செய்வது தெரியுமா?
  Published by:Vaijayanthi S
  First published: