ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இரவு டின்னருக்கு சப்பாத்தியுடன் இந்த வெண்டைக்காய் மசாலாவை செய்து பாருங்க.. சுவை அப்படி இருக்கும்.!

இரவு டின்னருக்கு சப்பாத்தியுடன் இந்த வெண்டைக்காய் மசாலாவை செய்து பாருங்க.. சுவை அப்படி இருக்கும்.!

வெண்டைக்காய் மசாலா

வெண்டைக்காய் மசாலா

இரவு டின்னருக்கு என்ன சமைப்பது என்று குழப்பமாக இருக்கா.? கவலைய விடுங்க இந்த வெண்டைக்காய் மசாலாவை சாப்பாத்தியுடன் செய்து சாப்பிட்டு பாருங்க.. ஈஸியான ரெசிபி இதோ..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இரவு டின்னருக்கு பெரும்பாலானோர் வீட்டில் சப்பாத்தி செய்வது வழக்கம். ஆனால் சப்பாத்தியுடன் என்ன சைடிஷ் செய்வது என்பது குழப்பமாகவே இருக்கும். இந்த  வெண்டைக்காய் மசாலாவை செய்து பாருங்கள்.  சுவையில் இதுவரை செய்த மற்ற சப்பாத்தி சைடிஷை எல்லாம் மிஞ்சிவிடும்.

தேவையான பொருட்கள் :

பிஞ்சு வெண்டைக்காய் - 1/2 கிலோ

முந்திரி பேஸ்ட் - 1 கப் ( முந்திரியை வேகவைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும் )

அரைத்த தேங்காய் - 1 கப்

பெரிய வெங்காயம் - 1 ( சிறியதாக நறுக்கியது)

தக்காளி பேஸ்ட் - 2 கப் (தக்காளியை வேகவைத்து தோலுரித்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1  டேபிள் ஸ்பூன்

பட்டை - 1 துண்டு

மல்லித்தூள், சீரகத்தூள் - தலா 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

வெண்ணெய் - 1/4 கப்

எண்ணெய் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை : 

வெண்டைக்காயை சாய்வாக வைத்து வெட்டி எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெயில் வெட்டிய வெண்டைக்காயை தனியாக நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அதே கடாயில் வெண்ணெய் விட்டு உருகியதும் வெங்காயம் மற்றும் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரையிலும் பொந்நிறமாக மாறும் வரையிலும் வதக்கவும்.

பின்னர் தக்காளி பேஸ்ட் போட்டு நன்றாக வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் முந்திரி பேஸ்ட் சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கவும்.

பின்னர் எல்லா பொடிகளையும் சேர்த்து, அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

இத்துடன் வெண்டைக்காய் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.  அதன்பின் 2 நிமிடம் மூடி வைத்த பின்னர் கிளறி இறக்கவும்.

அவ்வளவுதான், சப்பாத்திக்கு ஓர் அற்புதமான சைடிஷ் தயார்.

கூடுதல் குறிப்பு : 

சமைக்கும் முன் வெண்டைக்காயை  கழுவி ஈரம் காய்ந்த பின்னரே எண்ணெயில் வதக்கவும். அல்லது சுத்தமான துணி கொண்டும் ஈரத்தை ஒற்றி எடுத்த பின்னர் உபயோகிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் வெண்டைக்காயில் உள்ள வழவழப்பு தன்மை நீங்கி உதிரி உதிரியாக வறுக்க வரும்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Chapathi, Dinner Recipes, Ladies finger