எலும்புகள் ஆரோக்கியம், அடர்த்தி, எலும்புகள் தேய்மானம் ஆகாமல் வலிமையாக இருப்பது, பற்கள் உள்ளிட்டவற்றுக்கு கால்சியம் சத்து மிக மிக அவசியம். குழந்தைகள் உட்பட, கால்சியம் குறைபாட்டால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுகிறார்கள். பால் மற்றும் பால் பொருட்களில் மட்டும் தான் கால்சியம் இருக்கிறது என்பது தவறான கருத்தாகும். வீகன் உணவு முறையை பின்பற்றுபவர்கள் பால் மற்றும் பால் சார்ந்த எந்த பொருட்களையும் சாப்பிட மாட்டார்கள்.
எனவே, உடலுக்குத் தேவையான கால்சியம் சத்து, வீகன் உணவுகளில், அதாவது பால் தவிர்த்த சைவ உணவுகளில் இருந்தே பெறலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அதிகரித்து வரும் எலும்பு சார்ந்த நோய்கள் மற்றும் குறைபாடுகள்
ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் கூட, சில நேரத்தில் போதுமான உடலுக்கு தேவையான அளவு கால்சியம் கிடைப்பதில்லை. எனவே இந்தியாவில் எலும்பு சார்ந்த நோய்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கால்சியம் சத்து குறைவாக இருந்தால் எலும்புகள் பலவீனமாகவும் மற்றும் ஆஸ்டியோபோரோஸிஸ் என்ற எலும்புகளில் துளை ஏற்படும் நோயும் உண்டாகிறது. எனவே, கால்சியம் சத்து நிறைந்த உணவுகளின் தேவை அதிகமாக இருக்கிறது.
உணவுகளில் உடலுக்குத் தேவையான அளவுக்கு கால்சியம் சத்தை சேர்க்கவில்லை என்றால், ஆஸ்டியோபோரோஸிஸ் பாதிப்பு நிச்சயமாக ஏற்படும் என்று ஊட்டச்சத்து நிபுணர் லவ்நீத் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாளொன்றுக்கு 1000 mg அளவுக்கு கால்சியம் சத்து உடலுக்குத் தேவை என்று கூறியிருக்கிறார்.
சிலர், தேவையான அளவு கால்சியம் சத்துள்ள உணவுகளை சாப்பிட்டாலும், சிறுநீர் வழியாக கால்சியம் வெளியேறுவதால், உடலுக்கு போதுமான அளவுக்கு கிடைப்பதில்லை. எனவே, உணவின் வழியாகாத் தான் இந்த குறைபாட்டை சரி செய்ய முடியும்.
பாலில் மட்டுமல்ல, இந்த வீகன் உணவுகளிலும் கால்சியம் அதிகம் உள்ளது
பால் மற்றும் பால் பொருட்களில் அதிக அளவு கால்சியம் சத்து இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. உதாரணமாக ஒரு கப் பாலில் 290 எம்ஜி கால்சியம் இருக்கிறது. எனவே பால் மற்றும் பால் உணவு பொருட்களை சாப்பிடுபவர்களுக்கு உடலுக்கு தேவையான அளவு கால்சியம் கிட்டத்தட்ட கிடைத்து விடுகிறது. ஆனால் பால் மட்டும் அல்லாமல், தாவரங்களிலிருந்தும் எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கும் அளவுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பால் மற்றும் பால் பொருட்களைத் தவிர்த்து, எள்ளு, சோயா, வெண்டை, கடுகுக் கீரை ஆகியவற்றில் ஆகிய உணவுகளில் அதிக கால்சியம் உள்ளன.
கால்சியம் சத்தை முழுமையாக பயன்படுத்த இவையும் தேவை
எலும்பு ஆரோக்கியமாக இருப்பதற்கு கால்சியம் சத்து மட்டும் போதாது. உடல் ஒரு சத்தை கிரகித்துக் கொள்வதற்கு அதற்கு இணை-ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. எனவே கால்சியம் சத்தை உடல் கிரகிப்பதற்கு, எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு வைட்டமின் டி சத்து தேவைப்படுகிறது. வைட்டமின் டி சத்தை சூரிய ஒளியிலிருந்து பெற முடியும். போதிய அளவு கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் கூட, சூரிய ஒளி பெறவில்லை என்றால் உங்கள் உடலால் கால்சியத்தை பயன்படுத்தி கொள்ள முடியாது. அடுத்ததாக எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு கால்சியம் சத்துடன் மக்னீசியம் என்ற கனிமச்சத்தும் தேவை.
Also Read : உடலில் கால்சியம் பற்றாக்குறை இருப்பதற்கான அறிகுறிகள் இவை!
எலும்பு உருவாக்கத்திற்கு வைட்டமின் கே மிகவும் அவசியம்
அதேபோல காயம், ஃபிராக்ச்சர், தேய்மானம் ஆகியவற்றில் இருந்து மீள்வதற்கு கால்சியம் சத்துடன் ஜிங்க் அவசியம். குறிப்பாக மெனோபாஸ் மற்றும் மெனோபாஸ் கடந்த பெண்களுக்கு ஜிங்க் சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுவது மிகவும் அவசியம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bone health, Calcium