Home /News /lifestyle /

வாழைக்காய் பொடிமாஸ் செய்ய ரெசிபி!

வாழைக்காய் பொடிமாஸ் செய்ய ரெசிபி!

வாழைக்காய் பொடிமாஸ் கார குழம்புடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

வாழைக்காய் பொடிமாஸ் கார குழம்புடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

வாழைக்காய் பொடிமாஸ் கார குழம்புடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

    வாழைக்காயை அதிகமாக வறுவலாகவும் மசியலாகவும் தான் செய்து இருப்பீங்க. அதிகபட்சமாக பொரியலாக செய்து கொடுத்துருப்பீங்கள் ஆனால் பொடிமாஸ் செய்துள்ளீர்களா? இதோ ரெசிபி...

    தேவையான பொருட்கள்

    வாழைக்காய் - 1

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 3

    தேங்காய் துருவல் - 1/4 கப்

    மஞ்சள் தூள் தேவைப்பட்டால் - 1/4 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

     

    தாளிக்க 

    எண்ணெய் - 2 தேக்கரண்டி

    கடுகு - 1/2 தேக்கரண்டி

    உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

    கருவேப்பிலை - 1 ஆர்க்கு



    செய்முறை

    முதலில் வாழைக்காயை இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக வெட்டவும். சிறிது தண்ணீர் சேர்த்து, இரண்டு அல்லது மூன்று விசில்கள் வரை குக்கரில் வேக வைக்கவும். ஆரிய பிறகு, தோலை உரித்து, வாழைக்காயை துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், கடுகு பொரித்தும் உளுத்தம்பருப்பை சேர்க்கவும். அதன் பின்னர் கருவேப்பிலையையும் சேர்த்து வதக்கவும்.

    அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறாமல் வதக்கவும். பிறகு, மஞ்சள் தூள் சேர்ப்பதானால் சேர்த்து கொள்ளலாம் அல்லது அப்படியே விட்டுவிடலாம்.

    அதன் பிறகு உப்பு மற்றும் துருவிய வாழைக்காயை சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கவும். அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்.

    குறிப்பு

    1. வாழைக்காயை முக்கால் பதம் வேக வைத்தால் போதுமானது.

    2. சின்ன வெங்காயம் சேர்த்தால் மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

    3. கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்தும் இறக்கலாம்.

    4. தேவையென்றால் மஞ்சள் பொடி போடலாம் அல்லது வெள்ளையாகவே இருந்தால் பிடிக்கும் என்றால் அப்டியே விட்டு விடலாம்.

    மேலும் படிக்க... இது மீன் வறுவலா? இல்லை வாழைக்காய் வறுவலா ...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Banana, Food

    அடுத்த செய்தி