Home /News /lifestyle /

வாழைக்காயில் வறுவல் மட்டுமல்ல.... இப்படி கூட செய்து சாப்பிடலாம் : ரெசிபி இதோ...

வாழைக்காயில் வறுவல் மட்டுமல்ல.... இப்படி கூட செய்து சாப்பிடலாம் : ரெசிபி இதோ...

வாழைக்காய்

வாழைக்காய்

இது வித்தியாசமான சுவையாகவும் அதேசமயம் மதிய உணவுக்கு ஏற்ற பதார்த்தமாகவும் இருக்கும்.

    வாழைக்காய் என்றாலே பலரும் வறுக்க அல்லது கூட்டு வைக்கதான் யோசிப்பார்கள். ஆனால் இப்படி பொடிமாஸ் செய்து சாப்பிட்டிருக்க மாட்டார்கள். இது வித்தியாசமான சுவையாகவும் அதேசமயம் மதிய உணவுக்கு ஏற்ற பதார்த்தமாகவும் இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    வாழைக்காய் - 1
    வெங்காயம் - 1
    மிளகாய் தூள்
    தேங்காய் துருவல் - 1/4 கப்
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
    கருவேப்பிலை - 1 கொத்து



    செய்முறை

    முதலில் வாழைக்காயை இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக வெட்டவும். சிறிது தண்ணீர் சேர்த்து, இரண்டு அல்லது மூன்று விசில்கள் வரை குக்கரில் வேக வைக்கவும்.
    ஆறிய பிறகு, தோலை உரித்து, வாழைக்காயை துருவிக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், கடுகு பொரித்தும் உளுத்தம்பருப்பை சேர்க்கவும். அதன் பின்னர் கருவேப்பிலையையும் சேர்த்து வதக்கவும்.

    அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறாமல் வதக்கவும்.

    பூசணிக்காயில் இப்படி பொரியல் செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா..? 15 நிமிடத்தில் செய்யக்கூடிய ரெசிபி...

    அதன் பிறகு துருவிய வாழைக்காயை சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

    அதன் பிறகு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பிரட்டிக்கொள்ளுங்கள்.

    இறக்குவதற்கு முன் துருவிய தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்.

    அவ்வளவுதான் வாழைக்காய் பொடி மாஸ் தயார்.

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Banana, Food recipes

    அடுத்த செய்தி