முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இது மீன் வறுவலா? இல்லை வாழைக்காய் வறுவலா? இதோ ரெசிபி...

இது மீன் வறுவலா? இல்லை வாழைக்காய் வறுவலா? இதோ ரெசிபி...

வாழைக்காய் வறுவல்

வாழைக்காய் வறுவல்

வாழைக்காய் வறுவலா? இல்லை மீன் வருவலா? என்று தெரியாத அளவிற்கு அட்டகாசமாக இருக்கும்... வாழைக்காய் வறுவலை செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

வாழைக்காய் பஜ்ஜி செய்வது போல நீள நீளமாக நறுக்கி வறுவல் கூட செய்யலாம். பார்ப்பதற்கு மீனை போலவே இருக்கும் இந்த வாழைக்காய், வாழைக்காய் வறுவலா? இல்லை மீன் வறுவலா? என்று தெரியாத அளவிற்கு அட்டகாசமாக இருக்கும்... வாங்க எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்...

தேவையான பொருட்கள்

வாழைக்காய் – 3,

மிளகாய்த்தூள் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்,

சோம்புத்தூள் – அரை டீஸ்பூன்,

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்

கான்பிளவர் மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்,

இஞ்சி பூண்டு விழுது – அரை டீஸ்பூன்,

நல்லெண்ணெய் – வறுக்க தேவையான அளவிற்கு,

உப்பு – தேவையான அளவு

செய்முறை

பஜ்ஜி சுட வாழைக்காயை பட்டை பட்டையாக சீவுவது போல இதற்கும் பட்டை பட்டையாக நீளமாக மெல்லியதாக நறுக்கி தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் வாழைக்காய் கறுத்துப் போகாமல் வெள்ளையாகவே இருக்கும். பின் அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். கொதி வந்ததும் நறுக்கி வைத்துள்ள வாழைக்காய்களை சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். சூட்டிலேயே வாழைக்காய் வெந்து விடும். குறைந்தது பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை அப்படியே மூடி வைக்கவும்.

அதன் பிறகு ஒரு ஒரு வாழை காய்களையும் தனி தனியாக எடுத்து ஒரு தட்டில் உலர வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் சோம்பு தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து லேசாக பிரட்டி எடுக்கவும். கைகள் வைக்காமல் தட்டை சுழற்றி சுழற்றி எல்லா இடங்களிலும் மசாலா படும்படி செய்யுங்கள். பின்னர் ஒரு பௌலில் இஞ்சி பூண்டு விழுது மற்றும் கான்பிளவர் மாவு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசிறிக் கொள்ளவும். இந்த கலவையை மசாலாவுடன் சேர்த்து நன்கு எல்லா இடங்களிலும் தடவி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு மணி நேரம் கழித்து ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சுட வைத்துக் கொள்ளுங்கள்பின்னர் ஒவ்வொரு வாழைக்காய்களை எடுத்து மீனை எப்படி வறுப்பீர்களோ! அதே போல இரண்டு புறமும் நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். மிகவும் மொறுமொறுவென்று மீனை போலவே பார்ப்பதற்கு தோற்றமளிக்கும் இந்த வாழைக்காயை யாருமே பிடிக்காது என்று சொல்லமாட்டார்கள்..

மேலும் படிக்க... இனி தேங்காய் சட்னியில் லெமன் ஜூஸ் சேர்த்து பாருங்கள்.... அட்டகாசமாக இருக்கும்...

விநாயகர் சதுர்த்திக்கு வாங்கின பொரி மீதம் இருக்கிறதா? கவலைய விடுங்க...

தக்காளி மசாலா பூரி ரெசிபி...

காளான் குடைமிளகாய் பொரியல் செய்வது எப்படி?

செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு

 சிக்கன் பொரியல் சாப்பிட்டுருக்கீங்களா?

மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி?

சிக்கன் லெக் பீஸ் தெரியும் மட்டன் லெக் பீஸ் தெரியுமா?

சுவையான மீன் தொக்கு செய்வது எப்படி...?

கேரளா ஸ்டைல் வாழை இலை மீன் வறுவல் ரெசிபி..

First published:

Tags: Food