வத்த குழம்பு அல்லது வத்தல் குழம்பு எப்படி சொன்னாலும் அதோட டேஸ்ட் ஒண்ணு தான். பெரும்பாலும் சென்னை வாசிகள் வத்தக்குழம்பு என்று தான் சொல்வார்கள். வீட்டில் செய்வதை விடவும் கல்யாண பந்தியில், ஹோட்டலில் பரிமாறப்படும் வத்தக்குழம்பு ஆண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஹோட்டலில் மட்டும் தான் அந்த ருசியில் செய்ய முடியுமா? என்ன, அதே பக்குவத்தில் வீட்டிலும் டேஸ்டியான வத்தக்குழம்பு செய்யலாம். அதற்கான செய்முறை தான் இந்த பதிவு.
இந்த ரெசிபி வீடியோ டூடேஸ் சமையல் என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இப்போது இதற்கு தேவையான பொருள் மற்றும் செய்முறையை பார்க்கலாம்.
உறைமோர் இல்லாமல் கெட்டியான தயிர் வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க!
தேவையான பொருட்கள்:
சுண்டைக்காய் வத்தல், சின்ன வெங்காயம், தக்காளி, மிளகு, சீரகம், வெந்தயம், கடலைப்பருப்பு, மிளகாய் தூள், புளி, நல்லெண்ணெய்.
செய்முறை:
1. முதலில் கடாயில் சிறிதளவு கடலைப்பருப்பு, சீரகம், மிளகு, வெந்தயம் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை மிக்ஸியில் அரைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.
2. அடுத்தது, கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் காய்ந்த சுண்டைக்காய் வத்தலை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. இப்போது அதே நல்லெண்ணெய் இருக்கும் கடாயில் கடுகு, உளுந்து, கடலை பருப்பு , கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
4. பின்பு அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
5. இப்போது மிளகாய் தூள் சேர்த்து கிளறி அதில் வறுத்து வைத்துள்ள சுண்டைக்காய், பூண்டு சேர்த்து வதக்கி புளி கரைசலை சேர்க்க வேண்டும்.
6. புளி கரைசல் கொதித்து வரும் போது காரம் சரியாக இருக்கிறதா என பார்த்து, அரைத்து வைத்துள்ள மிளகு தூள் பொடியை அதில் சேர்க்க வேண்டும். நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
7. இப்போது சிறிதளவு வெல்லத்தை சேர்க்க வேண்டும். திக்கான வத்தக்குழம்பு பதத்திற்கு வந்தவுடன் இறக்கினால் சூப்பரான டேஸ்டியான கல்யாண வீட்டு வத்தக்குழம்பு தயார்.
குக்கரில் தாளித்து செய்யும் தக்காளி சாதம்.. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்!
இதில் தேவைப்பட்ட்டால் கத்திரிக்காய் சேர்த்தும் சமைக்கலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.