Home /News /lifestyle /

வரகு அரிசியில் பிரியாணி செய்வது எப்படி?

வரகு அரிசியில் பிரியாணி செய்வது எப்படி?

வரகு பிரியாணி

வரகு பிரியாணி

Varagu Biriyani | வரகை நன்கு தோல் நீக்கி சுத்தம் செய்யாவிட்டால் தொண்டையில் அடைத்துக்கொண்டு ஒருவிதமான ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதனால் நன்றாக சுத்தம் செய்துவிட்டு பின்னர் சமைக்க ஆரம்பிக்க வேண்டும்...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
சிறுதானியமான வரகு அரசியில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. வரகு அரிசி மலச்சிக்கலை போக்குகிறது.  உடல் பருமனைக் குறைக்கிறது. மூட்டு வலியைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. வரகு அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அத்தகைய வரகு அரிசியில் பிரியாணை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

வரகு அரிசி - 1 கிலோ,

பட்டை - 10 கிராம்,

கிராம்பு - 10 கிராம்,

ஏலக்காய் - 10 கிராம்,

எண்ணெய் - 250 மி.லி.,

மிளகாய்த்தூள் - 4 டேபிள்ஸ்பூன்,

மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கு,

தண்ணீர் - 300 மி.லி,

பச்சைப்பட்டாணி - 150 கிராம்,

வெங்காயம் - 350 கிராம் (நறுக்கியது),

தக்காளி - 300 கிராம் (நறுக்கியது),

புதினா - 1 கட்டு,

கொத்தமல்லித்தழை - 1 கட்டு,

முந்திரி - 150 கிராம்,

நெய் - 100 மி.லி.,

எலுமிச்சைப்பழம் - 2,

கேரட் - 300 கிராம்,

பீன்ஸ் - 200 கிராம்,

உருளைக்கிழங்கு - 200 கிராம்,

தயிர் - 200 மி.லி.,

இஞ்சி - 100 கிராம்,

பூண்டு - 60 கிராம்.



செய்முறை

முதலில் அடுப்பில் வெறும் கடாயில் வரகு அரிசியை வறுத்துக் கொள்ள வேண்டும். பின்பு தண்ணீர் சேர்த்து 20 நிமிடத்திற்கு ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யை காய வைத்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளி, பச்சைமிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, தயிர், புதினா, கொத்தமல்லித் தழை, நறுக்கிய காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

மேலும் படிக்க... jackfruit | சூப்பரான சுவையில் பலாக்காய் கறி செய்ய ரெசிபி...

பின்னர் கொதி வந்ததும் வரகு அரிசியை சேர்த்து கிளறி 10 நிமிடத்திற்கு மூடி வைக்கவும். பிரியாணி பதத்திற்கு வந்ததும், இறக்கி சிறிது நெய் சேர்த்து கிளறி பரிமாறலாம். இப்போது வரகு பிரியாணை ரெடி...
Published by:Vaijayanthi S
First published:

Tags: Food, Millets Food

அடுத்த செய்தி