• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சருமத்திற்கு அழகு சேர்க்கும் வரகு தேங்காய் பால் சூப்!

சருமத்திற்கு அழகு சேர்க்கும் வரகு தேங்காய் பால் சூப்!

வரகு தேங்காய் பால் சூப்

வரகு தேங்காய் பால் சூப்

வரகு தேங்காய் பால் சூப் பொதுவாக கொலஸ்ட்ரால் பிரச்னையை சீர் செய்யும்.

  • Share this:
சிறுதானிய வகைகளில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருப்ப‍து வரகு. இந்த வரகை நம்முடைய முன்னோர்கள் அடிக்கடி சமைத்து சாப்பிட்டதால் தான், நோய்நொடி இன்றி நீண்ட ஆயுளுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் இருந்தனர். நம் முன்னோர் விரும்பி உண்ட இந்த வரகில் ஏகப்பட்ட மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன.

வரகு அரிசி, கோதுமையைக் காட்டிலும் நார்ச்சத்து மிகுந்து காணப்படும் உணவு பொருளாக உள்ளது. இதில் மாவுச்சத்து குறைந்து இருப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. தவிர கோடைக்காலத்தில் நல்ல குளிர்ச்சியாக இருக்கும்.

வரகு


தேவையான பொருட்கள்:

சீரகம் - இரண்டு டேபிள் ஸ்பூன்

சோம்பு - இரண்டு டேபிள் ஸ்பூன்

வெந்தயம் - கால் டேபிள் ஸ்பூன்

பட்டை - ஒன்று

கொத்துமல்லி - தேவையான அளவு

வரகு - இரண்டு கப்

வெங்காயம் - ஒன்று

கேரட் - ஒன்று

இஞ்சி - ஒரு சிறு துண்டு

தக்காளி - இரண்டு

தேங்காய்ப் பால் - அரை கப்

பூண்டு - 6 பல்

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் - தேவையான அளவு

எலுமிச்சை சாறு - இரண்டு டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை தோல் நீக்கிப் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். உடன் கேரட்டையும் தக்காளியையும் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கொத்துமல்லியை ஆய்ந்து மண் நீக்கி கழுவி ஈரத்தை வடித்துக் கொள்ளவும்.

முதலில் சீரகம், பட்டை, சோம்பு, கொத்துமல்லி, வெந்தயம் ஆகிய இவற்றை எல்லாம் மேற்சொன்ன அளவையில் வறுத்து மசாலா போல பொடி செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்யை சேர்த்து நறுக்கிய வெங்காயம், காரட், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை எல்லாம் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்னர் மேலே வதக்கியவற்றுடன் வரகு, தக்காளி, முன் வறுத்துப் பொடி செய்த மசாலா, மஞ்சள் தூள், தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்துக் குக்கரில் வேக வைக்கவும். நன்கு வெந்து இரு விசில் வந்த பிறகு இறக்கவும்.

அதன் பின்னர் வெந்தவற்றை நன்கு மசித்து, வடிகட்டி அத்துடன் தேங்காய்ப் பால், எலுமிச்சை சாறு ஆகிய இவை இரண்டையும் சேர்த்து இரண்டு நிமிடம் மட்டுமே சுட வைத்து அருந்தலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: