பிக்பாஸ் வனிதா ஸ்டைலில் இன்ஸ்டன்ட் மேகி : காரசாரமான சுவையில் செம்ம டேஸ்ட்..! டிரை பண்ணி பாருங்க

மேகி

எளிமையான வகையில் காய்கறிகளின் கலவையில் அசத்தலாக இருக்கும். நீங்களும் டிரை பண்ணி பாருங்க.

 • Share this:
  குழந்தைகளுக்கு மேகி என்றாலே பிரியாணி சாப்பிடுவதற்கு இணையான மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஆனால் அதை அடிக்கடி செய்து கொடுக்க முடியாது என்றாலும் அவ்வபோது செய்யும்போது இப்படி காய்கறிகள் சேர்த்து ஆரோக்கியமாகவும் சமைத்துக்கொடுக்கலாம். அப்படி பிக்பாஸ் வனிதா தன் யூடியூப் சேனலில் காய்கறி கலவையில் காரசாரமான மேகி எப்படி செய்வது என கற்றுத்தருகிறார். அதன் ரெசிபி இதோ..

  தேவையான பொருட்கள் :

  மேகி பாக்கெட் - 6
  வெங்காயம் - 3
  தக்காளி - 3
  பச்சை மிளகாய் - 3
  இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 tbsp
  தக்காளி சாஸ் - 1tsp
  எலுமிச்சை - 1/2
  சோயா சாஸ் - 1tsp
  சில்லி சாஸ் - 1 tsp
  தேவையான காய்கறிகள் - 2 கப்
  முட்டை - தேவைப்பட்டால் 2  செய்முறை :

  கடாய் வைத்து எண்ணெய் தேவையான அளவு ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்குங்கள்.

  அடுத்ததக தக்களி சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். வதங்கியதும் சாஸ் வகைகளை சேர்த்து வதக்குங்கள். அடுத்ததாக நறுக்கிய காய்கறி துண்டுகளை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். உப்பு சிறிதளவு சேர்த்து அதோடு மேகி பொடியையும் சேர்த்து கலந்துவிடுங்கள்.

  வெங்காயம், மாங்காய், கற்பூரவள்ளி என ஆரோக்கியமான வகையில் சுட்ட பகோடா : நகுல் மனைவியின் வீடியோ பதிவு..!

  பின் காய்கறிகள் வேக கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். பின் மேகியை சேர்த்து பிறட்டிவிடுங்கள். தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளுங்கள்.

  இறுதியாக தட்டுப்போட்டு மூடி ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு எடுத்தால் மேகி நன்கு வெந்திருக்கும்.

  அடுப்பை அணைத்துவிட்டு பரிமாறுங்கள்.

   

   

   
  Published by:Sivaranjani E
  First published: